டைடானிக் கப்பல் மூழ்கியபோது அதில் கோடிக்கும் மேல் சொத்து வைத்திருந்த பலர் இருந்தனர். அதில் ஜான் ஜேக்கப் ஆஸ்டர் என்பவரும் ஒருவர் . அவரிடம் இருந்த செல்வத்திற்கு 30 டைடானிக் கப்பல்களை வாங்க முடியும். ஆனால் அவர் செய்தது என்ன!!
அவர் லைப் போட்டில் ஏறும் போது அருகில் இருந்த இரு குழந்தைகள் பயத்தில் உறைந்து நின்றதை பார்த்து அவர்களை அப் படகில் ஏற்றிவிட்டு தான் மூழ்கி இறந்தார். எப்பேர்ப்பட்ட தியாகம்?
உலகப் புகழ்பெற்ற மற்றொரு கோடீஸ்வரர் ஐஸிடோர் ஸ்டார்ஸ் ( Isidor Straus) அமெரிக்காவிலுள்ள மேஸீஸ் செயின் ஸ்டோர்ஸின் பங்காளர்களில் ஒருவர் . அவரும் அதே டைடானிக்கில் பயணம் செய்து கொண்டிருந்தார் . உதவிப் படகுகள் வந்தபோது அவரும் அவர் மனைவியும் ' நாங்கள் முதலில் படகில் ஏறமாட்டோம் ' . என்றனர். அருகிலிருந்த பணிப்பெண் எலன் என்பவருக்கு உதவி அவளை படகில் ஏற்றினர். கணவன், மனைவி இருவரும் இறக்கும் தருவாயில் சேர்ந்திருக்க தீர்மானித்தனர்.
இவர்கள் தங்கள் பணத்துடன் உயிரையும் மற்றவர்களுக்காக தியாகம் செய்தனர்.
தெய்வீகத் தியாகம்!!
-நளினி கோபாலன்
ஹைதராபாத்