,ஒரு நிமிட பார்வையால் என் இதயத்தை தட்டிப்பரித்துவிட்டாய்.
ஒரு வினாடி நினைவால் என் மதியை இழந்தேன். உன் கரங்கள் சேர காத்திருக்கிறேன் .
இரு கண்கள் சேர உன்னை காணவில்லையே.
உன் நினைவால் நான் வாடுகிறேன் .
சிலரின் உறவாய்
நீ வாழுகிறாய். ஆழ்கடலில் எழுகின்ற நீர்க்குமில் போல தவிக்கும் என் இதயத்திற்கு
நான் என்ன சொல்லி புரிய வைப்பேன் ?
நீ என்னவன் தான். ஆனால் ,எனக்கானவன் இல்லை என்று
நிழல் தரும் மரமாக நான் இருக்கிறேன் .
சற்று ஓய்வெடுக்கும் மனிதனாக நீ வருவாயா ?
இப்படிக்கு
உன் கரம் பற்ற காத்திருக்கும் தொலைநோக்கு காதலி
-நாக ஜெயந்தி
கடத்தூர்