tamilnadu epaper

செவிலியரின் சிறப்புகள்

செவிலியரின் சிறப்புகள்


துணிந்த உள்ளம் தூய வெள்ளாடை

பணிந்த சேவை பன்முகத்

திறமை


ஈன்ற மகவை எளிதில் மறந்தாலும்

தோன்றும் பணியைத் தொடரா விடினும்


பெற்றோர் பெரியோரைப்

பிள்ளை மறந்தாலும்

உற்றம் சுற்றம் உறவுகள்

மறந்தாலும் 


கதிரவன் காரிருள் கலைக்கா விடினும்

மதியோ ஒளியை மண்ணில் மறைத்தாலும்


பசித்தபோது உணவீந்து

உடல் நலம் 

பாதித்த போது பாசமோடு மருந்தீந்து


கையது கொண்டு மெய் தூக்கி

களங்க மின்றி பணி 

செய்கின்றீர்


தரணி நிலைக்க தாய்மார்க் குதவி

பரணி பாட வைக்கும் 

செவிலியரே


செவிலி யென்றால் தாய்

அன்றோ

செய்யும் சேவையில் குறை உண்டோ


கைவிளக்கு ஏந்திய காரிகையும் செவிலியரே

காலங் காலமாய் காருலகில் நிற்கின்றார்


சிந்தையில் நிறைந்த செய்கை யினால்

செவிலியரே நீவிர் நீடு வாழ்க



-சிவ .சே. முத்துவிநாயகம்

திருநெல்வேலி