tamilnadu epaper

தேனியைப் பார்.. தோழா..!

தேனியைப் பார்.. தோழா..!


ராஜா தேனி ராணித் தேனி.. வேலைக்காரத் தேனி.! ராப் பகலாய் உழைப்பதற்கு எடுத்துக்காட்டு பார் நீ!


கூஜா தூக்கி பிழைக்காமல் உழைத்து வாழும் தேனி! குடித்துக் கூத்து அடிக்காமல் சேகரிக்கும் தேனி!


மலர்கள்தேடி பறந்து பறந்து தேனெடுத்து சேர்க்கும்! மரக்கிளையில்.. மலைஉச்சி தேனடைகள் காக்கும்!  


இருக்கும் வரை சிறுப்பூச்சி.. இனிய தேனை சேர்க்கும்..! இன்பமெல்லாம் பிறருக்கென இனியத்தேனை வார்க்கும்!


மருந்தாக.. மகத்தான உயிர் வளர்த்து வாழும்! 

பறந்து வாழ்ந்து.. பாடமாக சிறந்த வாழ்வு யார்க்கும்!


ஒன்று கூடி.. பகை வந்தால் கொட்டும் வீரம் சொட்டும்! என்றும் அவைகள் சோர்வுயின்றி வாழ்வின் கதவைத் தட்டும்!


சின்னஞ் சிறிய கூட்டுப் புழுக்கள் சிறகடித்தும் பறக்கும்.. சிறிய தேனி அரிய குணத்தை இனியத் தேனாய் சுரக்கும்.!