எங்கள் ஊர் நாகப்பட்டினம் தாலுகாவில் அமைந்திருக்கும் திருமருகல் என்ற ஊர் அந்த ஊரில் நான் படித்து வளர்ந்தேன் தற்பொழுது சென்னையில் இருக்கிறேன் எங்கள் ஊரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் தற்போது சித்திரை மாதத்தில் நடக்கும் செட்டிப் பெண் செட்டி பிள்ளை திருமணம் மிகவும் விமர்சையாக இருக்கும் இந்த திருவிழா சித்திரை மாதம் பௌர்ணமிக்கு முன்னால் பத்து நாள் வைபவம் இங்கு நடைபெறும் இங்கே மற்றும் லட்சுமி தீர்த்தம் சிறுதொண்டர் மகன் சீராலன் படித்த பள்ளிக்கூடமும் இங்கே உள்ளது மற்றும் வியாசர் பிறந்த இடமும் இங்கேதான் இவ்வூருக்கு அருள் பாலிக்கும் ரத்தனகிரீஸ்வரர் உடன் ஆமோதலநாயகி அமர்ந்து இருக்கிறார்கள்.
மற்றும் மாணிக்க வன்னர் வண்டுவார் குழலி என்ற பெயரும் இவ் ஊரில் அமைந்திருக்கும் ஈசனுக்கு பெயர் உண்டு ஊர் இரத்தினகிரி என்ற சிறப்பு பெயரும் இந்த ஊருக்கு உண்டு ரத்தினகிரி என்று பெயர் வர காரணம் இவ் ஊரில் குசகேது ராஜா என்பவர் ஆண்டு வந்தார் அவர் ஆண்டு வந்த காலங்களில் பஞ்சம் ஏற்பட்டது பஞ்சத்தில் ஆடு மாடுகள் மனிதர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் மக்கள் எல்லாம் இறந்து விட்டார்களே நான் என்ன செய்தேன் இவ்வளவு பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்ன செய்வது என்று எண்ணி நாம் உயிரோடு இருப்பதற்கு அருகதை இல்லை நான் இறந்து போவது மேல் என்று ஒரு ஆலமரத்தடியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார் அதை பார்த்த ஈசன் அவருக்கு ஊரிலே ரத்தினமாக மழை பொழிய வைத்து பசி பஞ்சம் நீக்கி அவரை மகிழ்ச்சியாக ஆளாக்கினார் பசிபஞ்சம் நீங்கியது ஆகையால் இவருக்கு ரத்தினமாக மழை பெய்ததால் ஊரில் வீற்றிருக்கும் ஈசனுக்கு இரத்தனகிரீஸ்வரர் என்று பெயர் வந்தது மேலும் ஒரு சிறப்பு ஊரிலே நான்கு வீதிகளில் பாம்பு கடித்தால் யாரும் இறக்க மாட்டார்கள்.
ஏனென்றால் இங்கு செட்டி பெண் செட்டி பிள்ளை இருவரும் வெளியூரில் இருந்து திருமணம் செய்து கொள்ள இங்கு வந்தார் வரும் வழியிலே இங்கு இருக்கும் விநாயகர் கோவிலில் இலப்பாரிவிட்டு பகலிலே செல்லலாம் என்று தங்கியிருந்தார் அப்பொழுது பாம்பு வந்து செட்டி பிள்ளையை கடித்துவிட்டது இவள் செய்வது அறியாது அழுது கொண்டே இருந்தால் அப்பொழுது திருஞானசம்பந்தர் அவர் வீதி வீதியாக பாடல் பதிகம் பாடிக்கொண்டு வந்து கொண்டே இருந்தார் அப்பொழுது ஒரு அழுகுரல் கேட்கிறது என்ன என்று பார்க்கலாம் என்று அந்தப்பக்கம் வந்தார் அந்தப் பெண்ணிடம் ஏனம்மா அழுகிறாய் என்று கேட்டார் அப்பொழுது அந்தப் பெண் நாங்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இங்கே வந்தோம்.
எங்கள் தாய் தகப்பன் எங்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை ஆகையால் நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இங்கே வந்தோம் வரும் வழியிலேயே விஷம் தீண்டிவிட்டது திருமணம் ஆகாததால் என்ன செய்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை அதுதான் அழுது கொண்டிருக்கிறேன் என்று அப் பெண் சொன்னால் உடனே திருஞானசம்பந்தர் அந்தப் பெண்ணுக்கு தைரியம் கூறி கவலைப்படாதே அம்மா அந்தப் பிள்ளை பிழைத்து வருவார் என்று சொல்லி சடையா எனுமால் சரணி எனுமாள் என்ற பதிகத்தை 11 பதிகம் பாடினார் அப்பொழுது அந்தப் பிள்ளை தூங்கி எழுவது போல் எழுந்தார் விஷம் முறிந்தது உடனே அவர்கள் இருவருக்கும் அங்கே திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்திற்கு சாட்சி யார் என்று கேட்டால் வன்னி வாழை கிணறு இவர்களை வைத்து அங்கே திருமணம் நடைபெற்றது இந்த திருமணமும் மதுரையில் நடக்கும் அங்கே இவர்களுக்கு என்று ஒரு கோவிலும் உள்ளது இதனால் இங்கே பாம்பு கடித்தால் யாரும் இறக்க மாட்டார்கள் மேலும் ஒரு சிறப்பு இங்கிருக்கும் வாழை வேறு இடத்தில் வைத்தாலும் கிளம்பாது இதன் வாழைப்பழம் என்ன என்று இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை ஏனென்றால் இந்த வாழைமரம் தல விருட்சம் மற்றும் சீராளன் பயின்ற பள்ளியும் இங்கே உள்ளது ஊரின் திருக்குளத்திற்கு லட்சுமி தீர்த்தம் என்ற பெயர் உண்டு. ஏனென்றால் விஷ்ணுவும் லட்சுமியும் தனியாக இருக்கும் பொழுது பிகு முனிவர் விஷ்ணுவை சந்திக்க வருகிறார் அவர் வரும்பொழுது விஷ்ணு சயனத்தில் இருந்து எழுந்து
அவருக்கு பாத பூஜை செய்கிறார் இதை பார்த்த லட்சுமி தேவி கோபித்து கொண்டு இங்குள்ள குளக்கரையில் நீராடி விட்டு தவம் செய்கிறார் ஏனென்றால் அவர்கள் தனியாக இருக்கும்பொழுது ஒரு ஆண்டி முனிவருக்கு பூஜை செய்கிறாரே நேரம் காலம் தெரியவில்லையா என்று கோபம் வந்து சென்று விடுகிறார் உடனே பார்வதி பரமசிவர் வந்து அவர்களுக்கு சமாதானம் செய்து அவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்கிறார்கள் ஆகையால் இவ்வூர் திருக்குளத்திற்கு லட்சுமி தீர்த்தம் என்ற பெயர் வந்தது இத்தனை சிறப்பு கொண்ட இந்த ஊர் சித்திரை மாதத்தில் வரும் மாதம் மே மாதத்திலே திருவிழா நடக்க உள்ளது இதை கண்டு களித்து இறைவனின் ஆசி பெற்று வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
தெரு பொன்னி நகர் காரம்பாக்கம் போரூர்
இந்த ஊரில் இருக்கும் அம்மன் ஆமோதள நாயகி என்ற பெயர் யாருக்கும் இல்லை யாருக்கும் தெரியாது ஆனால் எனது தங்கைக்கு அங்கே பிறந்ததால் அப்பெயர் வைத்தோம் ஆனால் தற்போது என் தங்கையும் இல்லை இறந்து விட்டார்
எங்கள் ஊரில் ஐந்து வகையான ஐதீகங்கள் உள்ளது இதை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் நான் மேல் கூறியவை
செட்டி பெண் செட்டி பிள்ளை திருமணம் சீராளன் படித்த பள்ளி. லட்சுமி தீர்த்தம். வியாசர் பிறந்த இடம் மழை பஞ்சம் நீங்கி ஊர் செழிப்பான இடம் ஊருக்கு பெருமை சேர்க்கும் பசி என்பதே தெரியாது
மே ஒன்றாம் தேதி கொடியேற்றம் ஏழாம் தேதி சிட்டிசன் செட்டி பிள்ளை திருக்கல்யாணம்