புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நீர்விளங்குளம் கிராமத்தில் அருள்மிகு. ..சுப்ரமண்ய சுவாமி சமேத ஸ்ரீ வள்ளி தெய்வானை திருக்கோலத்தில்... ஒன்றரை அடி வேலில் இருக்கும் இந்த கோவில் தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு இடது புறத்தில்...ஒரு அரசமரம் மற்றும் இரண்டு வேப்பமர நிழலில் அமைந்துள்ளது.பார்க்க சாதாரண வேல் என நினைத்து அருகில் சென்று தரிசித்தால் வேலின் பின்புறம் விநாயகப்பெருமான் மூஷிக வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.முன்புறம் வலது இடது பக்கங்களில் வள்ளி தெய்வானை நடுநாயகமாக அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கோலம் கண்கொள்ளாகாட்சி...! வேலின் மேல்பகுதியில் நாற்புறமும் காளைகள் அமைந்துள்ளது.கீழ்பகுதியில் நாற்புறமும் யாளிகள்...ஒரு பிரதான கோயில் அமைப்பை ஒன்னறை அடி வேலில் அமைத்த விதத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.முதலில் இந்த வேலை தண்ணிக்குடத்தார் பரம்பரை தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர்.காலப்போக்கில் இந்த வேல் தங்கமாக இருக்குமோ...என சந்தேகப்பட்டு திருடர்களால் வேலின் ஒருபகுதியில் இருந்த காளை ஒன்று அறுக்கப்பட்டு விண்ணப்பட்ட நிலையில் இது தங்கமில்லை என தெரிந்து கொண்டு வந்து அநாதையாக போடப்பட்ட வேலை கிராமத்தார் மறுபடி இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். திருமணம் ஆகாத ஆண் பெண் யாராக இருந்தாலும் இந்த தெய்வத்தை வணங்க விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது இங்கு உள்ளவர்களின் நம்பிக்கை...!! மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் நடைபெற்று வருகிறது..!
காளிதாசன் நீர்விளங்குளம்