tamilnadu epaper

புதிய விடியல்!

புதிய விடியல்!


இளைஞனே!

இந்த புதிய

தமிழ் வருடத்தில்

உனக்கென ஒரு

பாதையை உருவாக்கு.


உன்னில் இருக்கும்

உதவாத பழக்கங்களை

உதறிவிட்டு

உண்மையாய் வாழ

உறுதியெடு.


ஒவ்வொரு வயதை

கடக்கும்போதும்

தீமைகளை

தீர்க்கமாய்

ஒழித்துவிட்டு

ஒளிமயமான பாதையை

தேர்ந்தெடு.


நல்லதை மட்டுமே

விதைத்து வை

நாளை உன்புகழ்

திசையெங்கும்

ஒலிக்கட்டும்.!


-கே.எஸ்.ரவிச்சந்திரன்

மணமேல்குடி.