tamilnadu epaper

பென்னாகரத்தில் புவி தினம் - 2025

பென்னாகரத்தில் புவி தினம் - 2025


ஏப்ரல் 22 புவி தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நீதிமன்றம் அருகில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


தருமபுரி இயற்கையைக் காப்போம் தலைமையகம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் பென்னாகரம் வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி தலைமை தாங்கினார். காரிமங்கலம் தனி வட்டாட்சியர் சுகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தார் . இயற்கையைக் காப்போம் தலைமையகம் நிறுவனர் கோ.தாமோதரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன் மற்றும் எம்.ஷகிலா பருவதனஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி ஊராட்சி மன்ற உதவியாளர் முருகன் மற்றும் தேவி மஹா டிரஸ்ட் தேவகி இயற்கையைக் காப்போம் தலைமையக நிர்வாகிகள் குமரவேல் தலைமை ஆசிரியர், துரை.முருகவேல், அருள், ஆறுமுகம், தாமோதிரன் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் புவி தினம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர்.