இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக புத்தக நாள் புத்தக வாசிப்பு நடைபெற்றது.
உலக புத்தக நாளையொட்டி பள்ளியில் நடைபெற்ற புத்தக வாசிப்பில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனாலும் ஆசிரியர்களின் அழைப்பை ஏற்று மாணவ மாணவிகள் வந்து புத்தகம் வாசித்துச் சென்றார்கள்.
புத்தக வாசிப்பு நிகழ்வை தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், இடைநிலை ஆசிரியர் ஆ.பிரேம்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.