புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1986 முதல் 88 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பயிற்சி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மு.கணபதி மற்றும் கண்ணையா ஆகியோர் தலைமையில் முன்னாள் மாணவர்கள் கண்ணகி தற்போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசித்ரா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
கிரேசி மேரி அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்
வனிதா தேவி இடைநிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் உள்ளிட்ட சுமார் 30 பேர் சந்தித்து பழைய நினைவுகளை கலந்துரையாடினர் முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு நன்கொடை வழங்கப்பட்டது சிறப்பு விருந்தினர்களாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜேசுதாஸ் மற்றும் பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இருந்ததாக அனைவரும் பகிர்ந்து கொண்டனர்