tamilnadu epaper

மழலை மலரே!

மழலை  மலரே!

என் கருவில் தோன்றிய மலரே !மகிழ்ந்தேன் உன்னாலே!

✨எத்தனையோ ! செல்வங்கள் இவ்வுலகில் உன் போல் செல்வம் வேறேதும் இங்கில்லை! 

✨மலர்கள்இல்லையேல் வாசமில்லை இவ்வுலகில்
 மலரே நீ இல்லையேல் சுவாசமே இல்லை! 

✨உன் சிவந்த உதட்டில் வரும் புன்னகையைக் கண்டதும் சினத்தில் சிவந்த  என் கண்களும் சிரித்ததே!

✨அடுக்களையில்  என் அடுப்பிடம்  சொல்வேன் இது வெறும் அன்னமன்று என் அன்பின் வெளிப்பாடு. ..

✨அடுப்புக்கூட கோபித்தித்துக் கொள்ளும் இந்த அம்மாவின்  தொல்லை தாங்கலை என்று!

✨ அன்பே !உன் எச்சில் பட்ட  உணவோ! அமிர்தமானது 

✨தேவர்களுக்குக் கூட இப்படி ஒர் அமிர்தம் கிடைத்திராது ! 

✨ நீ! எத்தனை தான் விஷமதனம் செய்தாலும் விழுந்தேன் உன் புன்னகைக்கு அடிமையாகி

✨அடுக்கிய துணிகளை நீ களைத்த போது ஆனந்தம்  கொண்டேன் எத்தனை குரும்பன் என் மகனென்று!  

✨சுவற்றில் உன்கிறுக்கள்களோ எனது இரவி வர்மனை  காண்பித்து. 

✨நீ ! எழுதிய முதல் எழுத்தோ! எனக்கு கவிதையானது. 

✨இது ஒர் அன்னையின் கவிதை அன்று ஒவ்வோர் அன்னையின் கவிதையுமாம்! 
வ.தீபா