அன்புடையீர்,
வணக்கம். தமிழ்நாடு இ பேப்பர். காம் 8.5.25 அன்றைய நாளிதழில் முதல் பக்கத்தில் இந்தியாவின் துல்லிய தாக்குதல் என்று போர் நடந்த விஷயத்தையும் படத்தையும் பார்த்தவுடன் அங்கே நேரில் சென்று பார்ப்பது போல ஒரு மன நிறைவு வந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமை அதில் வந்த செய்திகளை வைத்து இன்றைய பொழுதினை எனக்கு நல்லபடியாக தொடங்க உதவியது.
திருக்குறள் மிகவும் அருமை. அதன் பொருளுடன் படித்துப் பார்க்கும்போது அந்த திருவள்ளுவரை நேரில் என்னுடன் வந்து பேசுவது போல மகிழ்ச்சியாக இருந்தது. 214 புதிய பஸ்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார் என்ற செய்தி மிகவும் நல்ல செய்தியாக இருந்தது. சிறுவர்களுக்கான கோடை கால சிறப்பு யோகா இலவச பயிற்சி முகாம் நல்ல தகவல்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் புடலங்காயில் உள்ள வைட்டமின்களும் அதன் நன்மைகளும் படித்தவுடன் புடலங்காய் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடும் எனக்கு நல்ல அருமையான தகவலாக இருந்தது அனல் மின் நிலைய உயர் சாம்பல் விற்பனை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு இதனால் பல கோடி ரூபாய் வருவாய் என்ற செய்தி மிகவும் நல்ல தகவல்.
100 நாள் வேலைக்கான தினசரி ஊதியத்தை ரூபாய் 336 ஆக உயர்த்தி அரசு உத்தரவு போட்டது அதனால் பயனடைபவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல். வீரத்தை துணிச்சலை வெளிப்படுத்தி ராணுவம் வரலாறு படைத்துள்ளது என்று ராஜ்நாத் சிங் பெருமிதமாக சொன்னது உண்மைதான்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் மூவலூர் இராமாமிர்தம் வரலாறு மிகவும் அருமை அதனுடைய வரலாற்று செய்தியை படிக்கும் போது நல்ல தகவலாக அறிந்து மனதில் சேகரித்து வைத்துக் கொண்டேன்.
பல்சுவைக் களஞ்சியம் பகுதி வழக்கம் போல் நல்ல தகவல்களை அழகாக தொகுத்து கொடுத்தது அருமையாக இருந்தது. மீம்ஸ் உண்மையிலேயே ரசித்து மறந்து சிரிக்க வைக்கிறது. வாங்க சம்பாதிக்கலாம் என்ற பகுதியில் வந்து அனைத்து தகவல்களும் மிகவும் அருமை சம்பாதிக்க வேண்டும் என்ற துடிப்புடைய அனைவரும் அதைப் படித்து பலன் பெறுவார்கள்.
வேப்பம்பூ சூடி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் செய்தி புதுமையான தகவலாக ஆர்வமுடன் படிக்க வைத்தது. சித்திரை திருவிழா பட்டாபிஷேகம் செங்கோல் உள்ள அம்மன் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. 42வது தீமிதி திருவிழா ஆர்வமுடன் பார்க்க வைத்த படம் பாராட்டுக்கள்.
சுற்றுலாவில் 150 ரூபாயில் நாள் முழுக்க கொடைக்கானல் சுற்றி பார்க்கலாம் என்ற இந்த வசதி கொடைக்கானல் செல்லும் அனைவருக்கும் பயனுள்ள தகவல் இதனால் அவர்கள் நல்ல பலன் பெற்று எந்த வித கஷ்டமும் இல்லாமல் கொடைக்கானலில் எளிதாக சுற்றிப் பார்க்கலாம்.
மாநகரப் பேருந்தில் சென்னையில் நம் முதல்வர் அவர்கள் பயணம் செய்த படமும் செய்தியும் மிகவும் அருமைமகளிர் விடியல் திட்ட பயனாளிகளுடன் உரையாடியது மகிழ்ச்சியான செய்தி.
ஆப்ரேஷன் சிந்தூர் என்ற இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி அவர்களுக்கு ரஜினி பாராட்டி தெரிவித்தது போல அனைவருமே பாராட்டி தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுவது உண்மை.
சிங்கப்பூர் நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சியில் ஆறு தமிழர்கள் இதனால் குவியும் வாழ்த்துக்கள் என்ற செய்தி தமிழன் என்ற பெருமையை உணர வைத்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் மோதல் வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்தது ஆர்வமுடன் படிக்க வைத்த செய்தி.
20 பக்கங்களிலும் அருமையான செய்திகளை அழகாக தொகுத்து கொடுத்தது வியாழக்கிழமை விடியலை விஸ்வரூப தரிசனம் செய்தது போன்ற மகிழ்ச்சியை கொடுத்தது உண்மை. இப்படி அருமையாக ஒவ்வொரு விடியலுக்கும் அச்சாரம் இடும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்