குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை வந்து கொண்டே இருக்கிறதா? வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இருக்கும் பெண்கள் சுக்கிர பகவானை இப்படி வழிபாடு செய்தால் போதும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ முடியும்**
குடும்பம் என்றால் அதில் பலதரப்பட்ட மனிதர்கள் வாழ்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்களும் செயல்பாடுகளும் இருக்கும். அனைவரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அதனாலேயே ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதன் மூலம் சண்டைகளும் உண்டாகும். இது அவ்வப்பொழுது அனைத்து குடும்பத்திலும் ஏற்படக்கூடியது தான். அது தொடர்கதையாக தொடராமல் அப்பொழுதே நிறைவடைந்து விட்டால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒரு சில குடும்பங்களில் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு அழுகை போன்றவை நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒற்றுமையாக மனமகிழ்ச்சியுடன் நிம்மதியாக வாழ்வதற்குரிய வாய்ப்பே இருக்காது. அப்படிப்பட்ட குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஒற்றுமையுடன் வாழ**
குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அதற்கு நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிரனின் அருள் பார்வை பரிபூரணமாக கிடைக்க வேண்டும். சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அதனால் ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர பகவானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் குடும்ப வாழ்க்கை என்பது சிறப்பாக அமையும். குடும்பத்தில் எப்பேர்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருப்பது என்பது அவர்களுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு உதவும். அவ்வாறு விரதம் இருக்கக்கூடிய பெண்களாக இருந்தாலும் விரதம் இருக்க இயலாத பெண்களாக இருந்தாலும் அருகில் நவகிரகங்கள் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று சுக்கிர ஹோரையான காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்கு வெள்ளை நிற மலர்களை கொடுத்து இரண்டு நெய் தீபங்களை ஏற்ற வேண்டும். அந்த நெய் தீபங்களில் சிறிதளவு டைமன் கற்கண்டையும் போட வேண்டும்.
பிறகு நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வர வேண்டும். இது நவகிரகங்களை வழிபாடு செய்வது இதற்கு பிறகு சுக்கிர பகவானுக்காக ஆறு முறை திரும்பவும் நவகிரகங்களை சுற்றிவர வேண்டும். அப்படி சுற்றி வரும் பொழுது “ஓம் சுக்கிர பகவானே போற்றி” என்னும் மந்திரத்தை மனதிற்குள் கூறிக் கொண்டே சுற்றிவர வேண்டும். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிர ஹோரையில் நாம் சுக்கிர பகவானை வழிபாடு செய்வதன் மூலம் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் நீங்கும், கருத்து வேறுபாடுகள் அகலும், மனக்கவலைகள் விலகும்.
சுகபோகமான வாழ்க்கை அருளக்கூடிய கிரகமாக திகழக்கூடிய சுக்கிர பகவானை இந்த முறையில் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் வழிபாடு செய்ய குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கருத்து வேறுபாடுகளும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.
எம் அசோக்ராஜா _____
அரவக்குறிச்சிப்பட்டி ______
திருச்சி __620015____________