அழிச்சாட்டியம்" />
பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் குமாரின் அமர்க்களம் தாங்க முடியாத அவனது அம்மா விஜயா "ஏண்டா இப்படி படுத்தறே? ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தா உன்னோட அழிச்சாட்டியம் தாங்க முடியலையே! கொஞ்ச நேரம் விளையாடிட்டு வந்து படிடான்னு சொன்னா பசங்களோட சேர்ந்து கிரிக்கெட் விளையாடி எதிர் வீட்டு ஜன்னலை உடைச்சிட்டு வந்து நிக்கற" அம்மா பேசப் பேச உம்மென்றிருந்தான் குமார். அந்த நேரம் பார்த்து குமாரின் அப்பா ராஜா வரவும் பொரிந்து தள்ளினாள் விஜயா. "ஏங்க! இவன் அடங்க மாட்டாங்க! நேத்து பக்கத்து வீட்டுப் பையன் பிரபுவோட விளையாடறேன் பேர்வழின்னு அவன் மண்டையை உடைச்சிட்டு வந்துட்டான். ஏதோ சுமாரான காயம்கிறதால கொஞ்சம் ஆஸ்பத்திரி செலவோட தப்பிச்சது. இல்லேன்னா நம்மால இந்த ஏரியாவிலேயே குடியிருந்திருக்க முடியாது.ஏன்னா அவங்க அப்பா அரசியல்ல பெரிய புள்ளி. இன்னிக்கு என்னடான்னா கண்ணாடி ஜன்னலை உடைச்சிட்டு வந்திருக்கான்..'' "அதுக்கு இப்போ என்ன செய்யலாங்கறே?" என்று ராஜா கேட்டதும் "பேசாம இவனைக் கொண்டு போய் பக்கத்து ஊர்ல எங்க அம்மா வீட்ல விட்டுட்டு வந்துடுங்க. நாளையில இருந்து விடுமுறை தொடங்குது.இந்த வாரம் முழுசும் அங்கேயே கிடக்கட்டும்." என்று விஜயா சொன்னதும் காலையில் முதல் வேலையாக அவனைக் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான் ராஜா. இரண்டு நாள் போயிருந்தது.விஜயாவின் அப்பா பரசுராமனிடம் இருந்து ஃபோன். "என்னம்மா ..குமார் இவ்ளோ பொறுப்பான பையனா, ரொம்ப அடக்கமானவனா இருக்கான்..இந்த ரெண்டு நாளா கடையில எனக்கு எவ்வளவு உதவியா இருக்கான் தெரியுமா?.என்ன பணிவு..என்ன பொறுமை..அடக்கம்.. இந்த கால பசங்க பொறுப்பில்லாதவங்களா, வீட்டுக்கு அடங்காதவங்களா இருக்காங்க.அவங்க மத்தியில இப்படி ஒரு பொறுப்பான பையன பெத்ததுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும் .." அவர் பாராட்டப் பாராட்ட மயக்கம் வந்தது விஜயாவுக்கு.. மு.மதிவாணன் குபேந்திரன் நகர் அரூர் 636903 9159423090 9080680858 Breaking News:
பொறுப்பு