தினசரி தமிழ்நாடு இ பேப்பர்
காலை புத்துணர்ச்சி தரும் ஒரு
டானிக்காக செயல்படுகிறது
காப்பி அருந்தி கொண்டே பேப்பர்
படிப்பது தனி சுகம். ஆப்ரேஷன்
சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள
ஒன்பது தீவிரவாத முகாம்கள்
அழிக்கப்பட்டுள்ளது 15 பேர் பலி
40 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் தீவிரவாதி மசூர் அசாத்
குடும்பமே பலியாகி உள்ளது.
கர்னல் சோபியா குரோஷி
இருவருக்கும் மிகுந்த பாராட்டுக்கள்
அனல் மின் நிலையம் சாம்பல்
மூலம் 241 கோடி வருமானம்
கிடைத்துள்ளது. புடலங்காய்
மருத்துவ குணங்கள் வியக்க
வைக்கிறது. பொருளாதார நிலையில்
இந்தியா ஜப்பானை பின்னுக்கு
தள்ளி முன்னேறியுள்ளது.
100 நாள் வேலை திட்டம் ஊதிய
உயர்வு 336 ரூபாயாக உயர்த்த
பட்டுள்ளது. திமுகவின் நாலு
ஆண்டுகால ஆட்சியில் ஜாதி
மோதல்கள் வன்முறைகள் இல்லை
என திமுக அரசு கூறியுள்ளது.
வில்வ இலையும் அதன் பயன்களும்
வியக்க வைக்கிறது. ரிஷிவந்தியா
சார் நன்றி கவிதை
நல்ல விழிப்புணர்வு கவிதை ஆகும்
நெல்லை குரலோன் எழுதிய
உனக்குள்
கவிதை நம் உடல் உறுப்புகளை
பற்றிய விழிப்புணர்வு கவிதையாகும்
ஆபிரகாம் லிங்கன் கடிதத்தை
வெளியிட்டு ஆச்சரியப்படுத்திய
வகைக்கு மிக்க நன்றி. உதயநிதி
மட்டும்தான் ஸ்டாலினுக்கு
அடுத்தபடியாக முதல்வராக
வேண்டுமா என்ன தமிழிசை கேள்வி
ஏன் நீங்கள் உங்கள் தந்தைக்கு பிறகு
பதவிக்கு வரவில்லையா.
மோடி 140 கோடி மக்களின் சிகரம்
என நைனார் நாகேந்திரன்
கூறியிருக்கிறார். நாடு முழுவதும்
சாலை விபத்துகளுக்கு தனியார்
மருத்துவமனைகளில் இலவச
சிகிச்சை வழங்குவது தரமான
நடவடிக்கை. சிங்கப்பூரில்
ஆறு தமிழர்கள் ஆட்சி அமைக்க
உதவி செய்வது தமிழர்களுக்கு
கிடைத்த
பெருமை. இந்திய தாக்குதலுக்கு
பதிலடி கொடுக்கப் போவதாக
பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
தினமும் புதுப்புது செய்திகளை
தருவதில் தமிழ்நாடு இ பேப்பர்
இருக்கு நிகர் இல்லை
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி