தமிழ்நாடு இ பேப்பர் அதிகாலையில் அள்ளி வழங்கும் ஆனந்தம்
அற்புத விழிப்புணர்ச்சி. அகில உலகில் வாழும் தமிழர்கள் அனைவர்க்கும் சிகப்புக் கம்பளம் விரித்து சிறப்பளிக்கும்
சிந்தை விருந்துக்கு ராயல் சல்யூட்!
ஆசிரியர் குழுவினரின் இதயப் பூர்வமான ஈடுபாடு ஆச்சரியம் அளிக்கிறது.
அர்ப்பணிப்பின்
இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
வாசகர் சார்பில்
படைப்பாளர்கள் சார்பில் கஞ்சத் தனமில்லாமல் கம்பீர வணக்கம்.காயகல்ப
வாழ்த்துக்கள்!
சிந்தூர் தாக்குதல் 100
க்கும அதிகமான பயங்கர வாதிகள் கொல்லப்பட்டனர்.
வினை விதைத்தால் வினை அறுபடும் தானே?
தவிர்க்க முடியாத தாக்குதல்களால்
இந்தியா தலை நிமிர்ந்து நின்றாலும் இதய ஓரத்தில் நமக்கு வலி இல்லாமல் இல்லை.
மஹாத்மா பிறந்த இந்த தேசத்தில் அன்பும் அஹிம்சையும்
மேலும் மேலும் தழைக்க வேண்டும்.
தரணி முழுவதும் தங்கு தடையின்றி பரவி வெளிச்சம் பெற வேண்டும். அதன் விளைவாக போரில்லாத புதிய பூமி இங்கே மாசில்லா மல் மலர வேண்டும்.
அதற்காக நாளும் தவறாமல் நாம் ஒரே ஒரு நிமிடத்தை ஒதுக்கி பிரார்த்தனை புரிவோம்.பிழையற்ற
மனிதராய் பூமியில் திகழ்ந்து மனிதம் போற்றுவோம்.மாநிலம் காத்திடுவோம்.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் முஸ்லிம்கள் தயார்.
அசாதுதீன் ஓவைசி யின் கருத்து இந்த தருணத்தில் அதி முக்கியத்துவம் பெறுகிறது. உலக அமைதிக்கு வித்தாகவே விளங்குகிறது.
வாழ்க நலமுடன்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் பதின் வயதினரின் பிரச்னை களை வெகு நேர்த்தியாக விளக்கியதோடு தீர்வுக்கு வழி காட்டி யிருந்ததும் சிறப்போ சிறப்பு! சூப்பர் சார்!
தீவிர வாதத்தை வேரோடு அறுக்க வேண்டும்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் பொறுப்போடு ஆவேசம். அர்த்தமுள்ள ஆவேசம். ஆனந்தம் அளிக்கும் ஆவேசம்.
தீவிர வாதத்திற்கு எதிராக பேசுபவர்கள் ஆறறிவு படைத்த மனிதருக்கு அன்பும் அஹிம்சையும் தான் அழகு என்பதைத் திரும்பத் திரும்ப உச்சரித்து வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும். முதலில் வேருக்குத் தானே நீர் போய்ச் சேர வேண்டும்.
அரசியல் செய்திகள் திகள் அனைத்தும் இதழுக்கு இதம் சேர்க்கின்றன.
ஆன்மீகச் செய்திகள் அடுக்கடுக்காய் அரங்கேறி ஆனந்த தீபத்தை ஏற்றுகின்றன.
இலக்கியப் பக்கங்கள் இதயம் வருடி அள்ளுகின்றன.
அகத்தலோ அசத்தல் சார்!
லட்சுமி கிருஷ்ணன் மூர்த்தி யின் வரலாறு படிக்கப் படிக்க தேனமுதம். தெவிட்டாத நல்லமுதம்.
எப்பேர்ப்பட்ட மாமனிதர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர்
என்றெண்ணும் போது பரவசமும் சந்தோசமும் போட்டி போட்டு பொங்கி இதயம் நெகிழ வைக்கிறதே!
அரங்கேறிய கவிதைகள் அனைத்தும் முக்கனிச் சாறாக தித்திக்கிறது.
முதிர்ச்சியும் மென்மையும் குறைவில்லாமல் கலந்து கம்பீரம் காட்டுகின்றன.
மொத்தத்தில் வெல்டன்... வெல்டன்!
-நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்