அது
மிகவும் பாரம்
விட்டுவிடுகிறேன்
அதைக் கடந்து போய்விடட்டும் என்று..
என்
கைகளில் உள்ள
கோப்பை
நிரம்பி வழியும்
மதுவின் போதையிலும்
அதிக
போதை தரும் என் இரத்தம்..
உன்
நாவு
எய்த
ஒவ்வொரு அம்பிலும்
உனதன்பின்
கூர்மை
துளைத்து
களித்து
தைத்துக் கிடக்கிறது
தேகமெங்கும்..
அமிலத்தின்
அக்கினியாஸ்திரத்தால்
என் தேகமெனும்
வாழ்வின் கூடாரம்
பொசுங்கிப்போகிறது
உன்
ஈராஸெனும் அன்பினால்..
கனியக் காத்திருக்கும்
இனிய நம்
தருணங்களின்
ஒவ்வோர் இழையிலும்
இளமையின்
முதிர்ச்சி
முதுமையை விரட்டி
அகாப்பே எனுமன்பின்
முழுமையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது மீதமிருக்கும்
எனதாயுள்..
ஆர் ஜவஹர் பிரேம்குமார் ,
பெரியகுளம்.