ஒரு கிலோ எடைக் கொண்ட தங்கத்தினால் ஆன கடாயில் சமைத்து சாப்பிடும் சீனாவைச் சேர்ந்த இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில் சீனாவைச் சேர்ந்த ஷென்சென் என்ற இளம் பெண் தங்கத்தினால் செய்யப்பட்ட கடாயில் சமைத்து சாப்பிடுகிறார். இவருக்கு சொந்தமாக சீனாவில் 2 நகைக்கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது நண்பரின் தங்கப்பட்டறையில் ஒரு கிலோ தங்கத்தில் தங்கத்தால் ஆன பாத்திரத்தை செய்து வாங்கிக் கொண்டார். அந்த தங்க பாத்திரத்தில் தனக்கு பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டுள்ளார். தங்கப் பாத்திரம் விற்பனைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே பாத்திரத்திற்கு உரிமையாளரான வாடிக்கையாளரிடம் அனுமதி பெற்று, தான் சமைத்து சாப்பிட்டு பார்த்தேன் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தங்க பாத்திரத்தால் சமைப்பதால் உணவின் சுவையில் எந்த ஒரு மாறுபாடும் ஏற்படவில்லை. தங்கம் ஒரு சிறந்த கடத்துத்திறன் கொண்டது எனக் கூறியுள்ளார். இந்த தங்க பாத்திரத்தின் விலை இந்திய மதிப்பின்படி ரூ 84 லட்சம் மட்டுமே எனக் கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.