"அப்பா !மானிடர்க்கு எனில்" />
பெரியாழ்வாரின் வேண்டுதல்களுக்கு இணங்கி ஐந்து பெருமாள் வருகிறார்..என்பது ஐதீகம்..
இதனைக் கண்ட என்னுள் எழுந்த காட்சிகள்..கற்பனையே...
ஆண்டாளிடம் பெரியாழ்வார்" அம்மா உனக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்குகிறேன்!" என்கிறார்
"அப்பா !மானிடர்க்கு எனில் வாக்கப்படேல்!"...என்கிறாள் ஆண்டாள்.
உடனே ஆழ்வார் 108திவ்ய தேச பெருமாள்களை அவள் முன் காட்டுகிறார்...நீயே யாரைச் சொல்கிறாயோ அவருக்கு மணமுடிக்கிறேன் என்று..
இருந்தாலும் தந்தை அல்லவா..
வடபத்ரசாயி பெரிய பெருமாளை அழைக்கிறார் ஆழ்வார்..
உடனே வந்த பெரிய பெருமாளை வலம் வந்து கூப்பிய கைகளுடன் எதிர் கொள்கிறார் ஆழ்வார்..
"ஆழ்வாரே! எமை வலம் வந்ததை ஏற்றுக் கொள்கிறேன் அழைத்த காரணம் என்ன?" என்கிறார் பெரிய பெருமாள்.
"ஐயனே! சூடி கொடுத்த மாலையை ஏற்றுக்கொண்டீரே! ஆண்டாளின் வார்த்தைகளைப் கேட்டீரோ!" என்றார்
அதற்குப் பெருமாள் "கேட்டேன்! அவள் பிஞ்சிள் பழுத்தவள்!"..அவளே அறிவாள் என்கிறார்.
விடாப்பிடியாக ஆழ்வாரோ"உமக்குக் தோன்றுவதைச் சொல்லும்!"
"எனக்கு ஒன்றும் அறியவில்லை! நான் ஏற்றுக் கொண்டேன் அவள் ஏற்றுக்கொண்டாளா தெரியவில்லை எனக்கு!"..
"உமக்கு ஒரு யோசனை சொல்கிறேன்! இதனை ஏன் உமது குலதெய்வம்..மாலிடுஞ்சோலை சுந்தர்ராஜ் பெருமாளிடம் முறையிடக் கூடாது..குலதெய்வம் தீர்த்து வைக்கும் நான் வருகிறேன்!" என்று சொல்லிக் கிளம்புகிறார்..
அடுத்து ஆழ்வார் தன் குலதெய்வமாகிய மாலிடுஞ்சோலை சுந்தர்ராஜ் பெருமாளை வேண்டுகிறார்.
உடன் அவசர அவசரமாக வந்து நிற்கிறார் பெருமான் அவரையும் வலம் வந்து கைகூப்பி நிற்கிறார் ஆழ்வார்.
"என்னை அழைத்த நோக்கம் என்ன ஆழ்வாரே?" என்கிறார்
"இல்லை ஆண்டாளின் மனத்திற்குள் புகுந்தவரைச் சொல்ல வேண்டுமாய் கேட்கத்தான்.!" அவர் குரலில் ஒரு குழைவு இருக்கிறது.
"அவள் என்னிடம் நூறுதடா அக்காரவடிசல் செய்து தருகிறேன்!" என்று சொல்லி இருக்காள் அதனை நிறைவேற்றியபின்தான் சொல்ல வேண்டும்!".நான் எப்படிச் சொல்வேன் ஆழ்வாரே!
"இருந்தாலும் ஒரு குறிப்புத் தருகிறேன்! கண்ணனைப் பற்றி நீர் சொன்னாலும் கண்ணனை மணக்கும் எண்ணம் அவளிடம் இல்லை!" என்று சொல்லிவிட்டு நன்றாக யோசித்து முடிவெடும் ஐந்து குடிக்கு ஒரு பெண்பிள்ளை என்கிறார்.!".
அவரையும் தன்குல வழக்கப்படிச் சீர்செய்து அனுப்பிவிட்டு யோசிக்கிறார்.
அப்படியானால் சீனிவாசப் பெருமாளாய் இருப்பாரோ..உடனே அழைக்கிறார் திருவண்ணாமலை சீனிவாச பெருமானை
அவசரமாக அவர் முன் நிற்க அவரையும் வலம் வந்து கைகூப்பி நிற்கிறார்
"அழைத்த நோக்கம் என்ன ஆழ்வாரே?" எனக்கேட்க
"ஆண்டாளின் மனதில் நீர் உண்டோ!", என்கிறார்.
"சான்ஸ் குறைவே ஆழ்வாரே!" "வாமனனை உயர்த்தி பாடிய அளவு என்னைப் பாடவில்லையே
ஒருவேளை இருப்பேனோ!", என்கிறார்
"உமக்கேத் தெளிவில்லையா?" என்றவுடன் பெருமான் வெட்கப்பட்டு "போதும் போதும்!" என்று அவரிடம் சீரைப் பெற்று விடைபெறுகிறார்.
அப்போது ஆழ்வாரிடம் "எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது ! சொல்லட்டுமா...கிருஷ்ணன் பால் அன்புகொண்டவள் நீர் வேணா திருத்தங்கல் அப்பனிடம் விண்ணப்பம் செய்யுமே!", என்றவுடன்
"ஆஹா !அருமை !தன்யன் ஆனேன்!" என்றவர் திருத்தங்கல் அப்பனை வேண்ட ஆழ்வார் அழைப்பிற்குச் செவி சாய்த்து அவர் வர சம்மதிக்கிறார்.
அவருக்குப் பெரியாழ்வாரின் எண்ணம் புரிகிறது. அவரிடம் ஒரு பெண்பிள்ளை உண்டே என்ற எண்ணத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆபரணம் சாத்திக் கொண்டு தன் பொருளாதாரத்தைக் காட்ட பூம்பல்லக்கில் ஆடி வருகிறார்.
பெரியாழ்வாருக்கு இருப்பு கொள்ளவில்லை." இவராகத்தான் இருக்கும்!. கோதையின் மனம் கவர்ந்தவர்!" என்று நினைத்த மாத்திரத்தில் பூரிப்பு.
வந்தவரை வலம் வந்து சீர்கள் செய்து "மாப்பிள்ளை" என்று வாயார அழைக்கிறார்.
முன்னால் வந்த பெருமாள்களும் திரும்பி பார்க்க திருத்தங்கல் அப்பன் முகம் சிவக்கிறார்.
ஆண்டாளை அழைத்துக் கொண்டு வருவதற்காக பெரியாழ்வார் நடக்க ஆண்டாள் ரெங்க மன்னாருடன் வந்து ஆழ்வாரின் முன் நிற்கிறாள்.
கோபித்துக் கொண்டு செல்கிறார் திருத்தங்கல் அப்பன்.
பெரியாழ்வார் ஆண்டாளையும் ரெங்க மன்னாரையும் வலம் வந்து ஏற்றுக் கொண்டு சீர் செய்கிறார்.
மற்றப் பெருமாள்களையும் வேண்டிக் கொண்டு இவர்களை வாழ்த்தி அருள
கருட வாகனத்தில் வந்து வாழ்த்துமாறு வேண்ட ஐந்து பேருமே கருடவாகனத்தில் வர தானும் ஆண்டாளும் அன்னவாகத்தில் வந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
கண்கொள்ளாக் காட்சியாக எனக்குள் எழுந்தது இந்த கற்பனை
-K. BANUMATHI NACHIYAR
SIVAGIRI
TENKASI DISTRICT