tamilnadu epaper

ஹைக்கூ

ஹைக்கூ

(1)

வாயில் வலைபின்னுகிறது/சிலந்தி/
தேர்தல் வாக்குறுதி!

**       **       **       **
                      (2) 

இருண்டு கிடக்கிறது/
கண்ணாடித் தொட்டிக்குள்/  
வண்ணமீன்களின் வாழ்க்கை!

**       **       **       **
                      (3)

நடைபாதை வறியவனின் யாசகக்குரல்/
போட்டுச் செல்கிறேன்/ 
கண்களுக்குக் கடிவாளம்!

**       **       **       **                          (4) 

மிரட்டலான பின்னணியிசை/
மயிர்க் கூச்செரிகிறது/ 
காதருகே ரீங்கரிக்கும் கொசு

**       **       **       **                         (5) 

கூடுவிட்டுக் கூடுபாயும் மந்திரவாதி/ 
திகைத்து நிற்கிறார்/ கூட்டணிவிட்டுக் கூட்டணிபாயும் அரசியல்வாதி!

**         **       **     ***                           (6) 

வண்ணமயமாக்குகிறது வாழ்க்கையை/ கருப்பு வெள்ளை/ 
கரும்பலகை எழுத்துக்கள்!

**.      **.      **.      ***
         
          (7) 

காரிருள் திரைச்சீலை/
கிழிசல்வழி எட்டிப்பார்க்கும் கடல்/
வெள்ளலைகள்

***       ***       ****

சு.அருண் பிரகாஷ். இராமச்சந்திரபுரம்