உன்
கையில்
ஸ்ரீநிவாஸ் பிரபுவின் ராஜா ராணி கதை
சிறுகதைகளின் தொகுப்பைப்
படித்துக் கொண்டிருக்கிறாய்
நீ!
உன்
பார்வையை
அதிலிருந்து திசை திருப்ப
வழக்கமாக மு த் த மி டு ம்
நான்
தீபாவளி நேரம் என்பதால்
அதற்குப் பதிலாக
மத்தாப்பூ கொளுத்துகிறேன்!
அடுத்ததாகக்
கம்பி மத்தாப்பை
என்
கையில் கொடுத்து விட்டு
லட்சுமி வெடியை
நீ
கொளுத்துகிறாய்!
சங்கு சக்கரத்தை
என்
புறம் தள்ளி விட்டு
சரவெடியை
நீ
பற்ற வைக்கிறாய்!
உனக்காகவே
ஒரு கொழுப்பு குண்டு தயாரிக்க வேண்டும்
என்று
ஆசை வருகிறது
எனக்கு!
ஆனால்
அது சட்டப்படிக் குற்றம் என்பதால்
உன்னைக்
குண்டுக் கட்டாகத் தூக்கிச்
சுற்றுகிறேன்!
பட்டாசுகளுக்குப் பதிலாக
நீ(யே)
வெடிக்கிறாய்!
?????????
❤?முத்து ஆனந்த்❤?
?வேலூர்?