அன்றும் இன்றும் என்றும்
எனக்குத்
தீபாவளி மலர்
பொங்கல் சிறப்பிதழ்
என எல்லாமே
நீதான்!
உன்
முத்துப் புன்னகையே
எனக்கு
மத்தாப்பூ!
என்னை
நீ
சுற்றும் போதெல்லாம்
நீயே
எனக்கு
சங்கு சக்கரம்!
உன்
ஒரு மு த் த ம்
என்னைப்
பற்ற வைத்த ராக்கெட்டாக மாற்றும்!
உன்
தழுவல்களில்
எனக்குள்ளே
கயிறு கட்டாத ரயில் ஓடும்!
உன்
ஒரு சிரிப்பு
தீபாவளி என்றால்
உன்
ஜிமிக்கி கம்மல் ஆடும் ஆட்டமோ
நம் தலை தீபாவளிக்கு வரவேற்பு!
என்னை
உறங்க விடாத
காவாலா மத்தாப்பூ
உன்
கண்களிலிருந்து மட்டுமே ஒளிர்கிறது!
?????????
❤?முத்து ஆனந்த்❤?
?வேலூர்?