மணி மகுடம்
தீபாவளி மலர்
இதழ் முகப்புப் படத்தில்
நீ!
இதை விட வேறோர்
அழகான தீபாவளி வேறெதெனக்கு?!
ஆனந்த விகடன் இதழ் முழுவதும்
நண்பர்கள் ஆக்ரமித்திருக்கிறார்கள்!
அதைக் கண்டு களித்த
எனக்கோ
வித விதமான பட்டாசுகளை
வெடித்த மகிழ்ச்சி!
பட்டுக்கோட்டை நாவல் திலகத்தின்
உல்லாச ஊஞ்சல் இதழில்
நம் தலை தீபாவளியைப் பற்றிய
செய்தி!
நம்
கா த லை
அன்பர்கள் வாழ்த்துவதை
வார்த்தைகளில் சொல்லி விட
இயலுமா என்ன?!
சூப்பர் நாவலில்
நீ
தீப ஒளியேற்றும்
வனப்பான வண்ண ஓவியத்தை
மிக மிக உயிர்ப்புடன்
வழங்கியிருக்கிறார்
சீர்காழியின் சித்திரச் செல்வன்
ஜுனியர் தேஜ்!
இனி
வாழும் காலம் முழுவதும்
ஒவ்வொரு தீபாவளியும்
தலை தீபாவளிதானே நமக்கு!
?????????
❤?முத்து ஆனந்த்❤?
?வேலூர்?