பட்டாசு வெடிக்கும் இடத்தில்
பட்டாம்பூச்சிக்கு என்ன வேலை?!
என்பது போல்
அஞ்சி அஞ்சி ஒதுங்குகிறாய்!
அழகு மயில்
நீயே
குலாப் ஜாமுன்
உனக்கென்ன
தீபாவளி இனிப்பு வழங்குவது?
என்று
எனக்கு(ள்) ஒரு குதூகலக் குழப்பம்!
அதரங்கள் வழியாக
எனக்குத்
தேன் மிட்டா(ய்)யை
வழங்கும் தேவதை
நீ!
வார்த்தைகளில் பட்டாசு வைத்தாலும்
சிரிப்பில் பூ மத்தாப்பை
வைத்திருப்பவள்
நீ!
தினகரன் தீபாவளி மலரை
ஒரு மலரே
எனக்குப்
பரிசளிப்பது
ஒரு வித்தியாசமான வரம்தானே!
இ த ய ம்
உட்பட
எதையும் விடாமல்
உனக்குப்
பரிசளிக்கிறேன் அன்பே வா!
?????????
❤?முத்து ஆனந்த்❤?
?வேலூர்?