"என்னடா உளர்றே?”
"ஆக்சுவலா இன்னிக்கு செல்போனை
மறந்து வீட்டுல வெச்சிட்டு வந்திட்டேன்…சரி...சும்மா ஒரு சீன் கிரியேட் பண்ணி
எல்லோரையும் கலாய்க்கலாம்ன்னு தோணிச்சு...அதான் சும்மா கத்திக் களேபரம் பண்ணினேன்…எப்படி என் நடிப்பு?”
"ச்சை…இதிலென்னடா லாபம் உனக்கு?”
" />
பஸ்ஸிலிருந்து கண்ணீருடன் இறங்கிய கண்ணன் பஸ் நகர்ந்ததும் 'ஹா..ஹா..” வென்று உரத்த குரலில் வாய் விட்டுச்
சிரித்தான்.
'டேய்..டேய்...இப்பத்தான் பஸ்ல செல்போனை யாரோ அடிச்சிட்டதா சொல்லிக்
கத்திக் களேபரம் பண்ணி… அழுதே…கீழே இறங்கியதும் சிரிக்கறியே…உனக்கென்ன பைத்தியமா?” நண்பன் பிரகாஷ் கேட்க,
"பைத்தியக்காரன் நானில்லை…அந்த பஸ்ல இருந்தவங்கதான் பைத்தியக்காரர்கள்…” மீண்டும் சிரித்தான்.
"என்னடா உளர்றே?”
"ஆக்சுவலா இன்னிக்கு செல்போனை
மறந்து வீட்டுல வெச்சிட்டு வந்திட்டேன்…சரி...சும்மா ஒரு சீன் கிரியேட் பண்ணி
எல்லோரையும் கலாய்க்கலாம்ன்னு தோணிச்சு...அதான் சும்மா கத்திக் களேபரம் பண்ணினேன்…எப்படி என் நடிப்பு?”
"ச்சை…இதிலென்னடா லாபம் உனக்கு?”
"என்ன மச்சான் அப்படிக் கேட்டுட்டே?…பஸ்ல இருந்த காலேஜ் பொண்ணுங்க எல்லாரும் என்னையே பார்த்திட்டிருந்தாங்க...நானும் பாவமா அவங்களையே
பார்த்திட்டிருந்தேன்…அதுல ரெண்டு பேரு லேசாய்ச் சிரிச்ச
மாதிரி இருந்திச்சு…சொல்ல முடியாது..நாளைக்கு "என்ன
சார் உங்க செல்போன் கெடைச்சுதா?” ன்னு கேட்டாலும் கேட்பாங்க...அது தொடர்ந்து காதலா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...அனுதாபத்துல கூடக் காதல் பொறக்குமாம்..”
"ஹும்... ஒரு கேரக்டரா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, எதிர்த்திசையில் நடந்தான் பிரகாஷ்..
சந்தோஷமாய் வீடு திரும்பிய கண்ணன் வீடே அமைதியாயிருக்க தாயிடம் கேட்டான் 'என்னாச்சும்மா?..ஏன் அப்பாவும் சுகன்யாவும் சோகமாயிருக்காங்க?"
"உன் அருமைத் தங்கச்சி கிட்டக் கேளு”
சுகன்யாவிடம் சென்று கேட்டான்.
"அண்ணா… நீ உன் செல்போனை இன்னிக்கு மறந்து வெச்சிட்டுப் போனதைப் பார்த்தேன்..சரி..இன்னிக்கு ஒரு நாளைக்கு நாம காலேஜூக்குக் கொண்டு போகலாமேன்னு எடுத்திட்டுப் போனேன்…பஸ்ல…பஸ்ல யாரோ அதை அடிச்சிட்டுப் போயிட்டாங்கண்ணா…” சொல்லிவிட்டு அவள் அழுகையைத்தொடர,
தன்னுடன் பஸ்ஸில் பயணித்த அனைவரும் கோரஸாய் 'போடா பைத்தியக்காரா…!” என்று கத்துவது போலிருந்தது கண்ணனுக்கு.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்