நன்மை தீமையை
எடையிட்டுப் பார்த்தோம்//
நாகரீகம் தொலைந்ததில்
நன்மையிங்கு தோற்றது//
நல்லவரையும் தீயவரையும்
நிறுத்துக் கண்டதில்//
தோற்றார் நல்மனத்தார்
வென்றார் தீக்குணத்தார்//
நியாயமும் அநியாயமும்
நேருக்குநேர் மோதிட//
சுருண்டது நியாயமனம்
திரண்டது அநியாயகுணம்//
கோளாறு எங்கென்று
குடைந்து தேடிட//
தராசுக்கு விழியில்லை
தர்மமும் நினைவிலில்லை//
வேருக்கு வென்னீர்
பாய்ச்சியவர்க்கு பன்னீர்//
தியாகங்கள் புரிந்தோர்க்கு
தினம்தினம் கண்ணீர்//
------
முகில் தினகரன், கோவை