கொழும்பு, ஏப். 6–
இலங்கையின் உயரிய விருது பெற்ற பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது:
''ஸ்ரீலங்கா மித்ர விபூஷண விருதை அதிபர் அநுர குமர திசநாயகவிடம் இருந்து பெற்றதை மிகவும் கவுரவமாக உணர்கின்றேன். இது சாதாரணமாக கவுரவம் அல்ல. இது எனக்கு மாத்திரம் கிடைத்துள்ள கவுரவம் கிடையாது. இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களுக்கு கிடைத்த கவுரவமாகவே கருதுகின்றேன். இதனூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்பு மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க தொடர்புகளுக்கான கவுரவமாகவுமே நான் இதனை பார்க்கின்றேன். எனக்கு வழங்கப்பட்ட இந்த கவுரவத்திற்காக ஜனாதிபதி அநுர குமர திசநாயகவுக்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை வாழ் மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு மோடி கூறினார்.