tamilnadu epaper

வெயில் பாதிப்பும் இனி பேரிடர்... அரசு நிவாரணம் கிடைக்கும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவிப்பு

வெயில் பாதிப்பும் இனி பேரிடர்...   அரசு நிவாரணம் கிடைக்கும்  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவிப்பு


சென்னை, ஏப். 9–

‘வெயில் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. வெயிலில் இருந்து மக்களை காக்க, அரசு முடிந்த உதவிகளை செய்யும்,’’ என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

  தமிழகம் முழுதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அனைத்து கட்சி சார்பில், நீர், மோர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. உழைக்கிற தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என 

சட்டசபையில், கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., உறுப்பினர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.


இதற்கு வருவாய்த்துறைஅமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பதில் அளிக்கையில்," இதுவரை பேரிடர் என்றால், மழை, புயல், வெள்ளத்தை அறிவித்திருந்தோம். தற்போது, வெயிலும் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு அரசு நிவாரணம் வழங்கும். வெயில் வரும் நேரத்தில், நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான யுக்திகளை அரசு அறிவித்துள்ளது. அரசு முடிந்த உதவிகளை செய்யும்" என்றார்.