கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தமிழ்புத் தாண்டு விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் பெரு மளவில் திரண்டனர். ஈரோடு மாவட்டம், கோபிக்கு அருகாமையில் அமைந்துள்ள கொடிவேரி அணையின் நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதால், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து ஆனந்தமாக குளித்துச் செல்வது வழக் கம். தற்போது கோடை வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ளதா லும், திங்களன்று தமிழ்புத்தாண்டு விடுமுறை என்பதாலும் கொடி வேரி அணைக்கு திங்களன்று காலை முதலே சுற்றுலாப் பயணிக ளின் வருகை அதிகரித்தது. வெயிலின் கொடுமை தாங்க முடியா மல், தற்போது வரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து, அருவியில் குடும்பத்துடன் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். அதேவேளையில், கொடிவேரி அணையில் காவல்துறையி னரின் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், சுற்று லாப் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட் டது. மேலும், ஆண்கள் உடை மாற்றும் அறை, குடிநீர், கழிப் பறை, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை எனவும் சுற்று லாப் பயணிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத் தித் தர வேண்டும் என்றும், விடுமுறை நாட்களில் கொடிவேரி அணைப் பிரிவிலிருந்து அணை வரை பேருந்துகளை இயக்க வும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் ஒரே நாளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கொடி வேரி அணையில் திரண்டதால், அணைக்குச் செல்லும் சாலை யில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை காணப்பட்டது.