tamilnadu epaper

செயலிழந்த மலக்குடலை சரி செய்து அரசு மருத்துவமனை சாதனை

செயலிழந்த மலக்குடலை சரி செய்து அரசு மருத்துவமனை சாதனை

பொள்ளாச்சி, ஏப். 15-

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபருக்கு, செயலிழந்திருந்த மலக்குடலை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரஜினி சிங் (40). இவர் கடந்த மூன்று நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவ திப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட் டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது குடல் வீங்கி செயலிழந்து மலம் வெளியேறாமல் வயிறு வீங் கியிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை நிபுணர்கள் கார்த்தி கேயன், முருகேசன் மற்றும் சங்கமித்ரா ஆகியோர் தலைமை யிலான மருத்துவக் குழுவும், மயக்க மருத்துவர்கள் ஜெயக் குமார், நவாஸ் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் ஆதி லட்சுமி, தனலட்சுமி ஆகியோரும் இணைந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சிக்கலான அறுவை சிகிச்சையில், நோயாளி ரஜினி சிங்கின் மலக்குடலில் சுமார் 5 சென்டிமீட்டர் அளவிற்கு துளை ஏற்பட்டு, வயிற்றில் சீழ் கட்டியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மருத்துவர்கள் உடனடியாக அந்த துளையை சரி செய்து, மலக்குடலை தற்காலிகமாக வயிற்றின் வெளியே வைத்து தைத்தனர். தற்போது நோயாளி நலமுடன் இருப்ப தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து தங்களது உறவினரின் உயிரை காப்பாற் றிய மருத்துவக் குழுவினருக்கு, ரஜினி சிங்கின் உறவி னர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை செலவா கக்கூடிய இந்த அறுவை சிகிச்சை, பொள்ளாச்சி அரசு மருத்து வமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா மற் றும் மருத்துவக் குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.