tamilnadu epaper

2வது டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

2வது டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

பர்மிங்காம், மே.26-

பாகிஸ்தான் - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்றிரவு நடந்தது.

இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 84 ரன் திரட்டினார். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டையும், இமாத் வாசிம், ஹாரிஸ் ரவுப் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 160 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பஹர் ஜமான் 45 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்லே 3 விக்கெட்டும், மொயீன் அலி, ஜோப்ரா அர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது. 3-வது போட்டி கார்டிப்பில் நாளை மறுநாள் நடக்கிறது.