ஜப்பானில் ஏற்பட்டுள்ள 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத் தீயை அணைக்க 1,700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்காட்டுத் தீயில் இருந்து 4,600 மக்கள் வெளியேற்றப்பட உள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒபுனடோ என்ற நகருக்கு அருகில் பிப் 27 அன்று ஏற்பட்ட காட்டு தீயில் சுமார் 5,200 ஏக்கர் காடுகள் எரிந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.