புதுடில்லி:
92 வயதான ஓய்வு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரை, டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி, ரூ.2.2 கோடி மோசடி செய்த இருவரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
கடந்த மார்ச் 12ம் தேதி, டில்லியை சேர்ந்த 92 வயதான ஓய்வு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணருக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையின் அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டவர்களிடமிருந்து பல வீடியோ அழைப்புகள் வந்துள்ளது. அவர் மீது எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டி உள்ளனர்.
டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரை வெளியே எங்கும் செல்ல முடியாமல் அறைக்குள் அடைத்து வைத்திருந்தனர்.
தொடர்ச்சியான மிரட்டல் வீடியோ அழைப்புகள் மூலம், போலியான ஆவணங்களைக் காட்டி ஏமாற்றி, போலியான வீடியோ கான்பரன்ஸ் முறையிலான நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க கட்டாயப்படுத்தினர்.
இதனால் பயந்து போன அவர், அதை நம்பி, தனது அனைத்து டெபாசிட் தொகைகளை, மோசடி செய்பவர்களின் அறிவுறுத்தலின்படி மூன்று வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார்.
தான் ரூ.2.2 கோடி பணத்தை இழந்த பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து டில்லி போலீசின் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
விசாரணை நடத்திய சைபர் குற்றத்தடுப்பு துணை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் திவாரி கூறியதாவது: விரிவான கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல்-தடம் பகுப்பாய்வுக்குப் பிறகு, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அமித் சர்மா என்ற ராகுல் கைது செய்யப்பட்டான். அவனது கூட்டாளி ஹரி ஸ்வர்கியாரி அசாமின் குவஹாத்தியில் இருந்து கைது செய்யப்பட்டான். இவர்களிடமிருந்து மூன்று மொபைல் போன்கள், குற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் பிற குற்றவியல் டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து செயல்படக்கூடியவர்கள் உட்பட கும்பலின் மீதமுள்ள உறுப்பினர்களை அடையாளம் கண்டு கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு ஹேமந்த் திவாரி கூறினார்.
க்ஷ.....
மகா., அரசு அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: ரூ.9 கோடி ரொக்கம்; ரூ.23 கோடி வைர நகைகள் பறிமுதல்
மும்பை: மும்பை மற்றும் ஐதராபாத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.32 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு
மகாராஷ்டிரா மாநிலம் வாசை விரார் மாநகராட்சி நகரமைப்பு துணை இயக்குனர் ஒய்.எஸ்.ரெட்டி மீது கட்டுமான அனுமதியில் முறைகேடு, சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி புகார்கள் எழுந்தன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பை கிடங்குக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், சட்ட விரோதமாக கட்டடம் கட்ட அனுமதி வழங்கியதாக, அவர் மீது வழக்கு பதியப்பட்டது.இதையடுத்து அவருக்கு சொந்தமான மும்பை, ஐதராபாத் வீடுகள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என மொத்தம் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
இதில், 23.25 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 9.04 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.