tamilnadu epaper

Tips

Tips


கருணை கிழங்கின் மருத்துவப் பயன்கள்


உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது.



கருணை கிழங்கு மலச்சிக்கலை போக்கும் தன்மையுடையது.



நாட்பட்ட காய்ச்சலுக்கு ஒரு சிறந்த மருந்தாக கருணைக் கிழங்கு விளங்குகிறது.



சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும்



இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை வைட்டமின்களும் உள்ளன.



ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பான வேலையை செய்வதில் காரும் கருணை பயன்படுகிறது. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும். அதோடு அந்த உறுப்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும்.


முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்


முள்ளங்கி உடலுக்கு தேவையான விட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் அளிக்கின்றன.


உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது.



வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது, சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.



முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.



முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.



பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சனைகளுக்கு முள்ளங்கிப் பிஞ்சு சாறு சிறந்த மருந்தாகும்.



ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும்.


முள்ளங்கி வயிற்று எரிச்சல், வாதம், வீக்கம், இருமல் ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது.


மரவள்ளி கிழங்கின் மருத்துவப் பயன்கள்


மரவள்ளிக் கிழங்கில் உள்ள ஒரு வைட்டமினான பி17 புற்றுநோய் நிவாரணத்திற்கு மிக முக்கிய பங்காற்றுகின்றது.


மரவள்ளி கிழங்கின் இலை விஷக்கடிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது.


மரவள்ளி கிழங்கு கண்களுக்கு தௌpவான பார்வையை தரும் தன்மை கொண்டது.


மரவள்ளிக் கிழங்கு எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது.


மரவள்ளி கிழங்கு புரதச்சத்தை மிகுதியாக கொண்டுள்ளது. மாவுச்சத்தை அதிகம் பெற்றுள்ளது. இதில் வைட்டமின் ஏ,பி உள்ளது.



இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், சிறுநீரை பெருக்குவதிலும் மரவள்ளிக் கிழங்கு பயன்படுகிறது.



பனங்கிழங்கின் மருத்துவப் பயன்கள்


பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது.


மலச்சிக்கலைத் தீர்க்கக் கூடியது.



பனங்கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டி சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும்.



கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும்.



பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும்.


 

ஆப்பிளின் மருத்துவப் பயன்கள்


ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை.


கலோரிகளில் குறைவானது ஆப்பிள். கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.



தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பது போல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது.


சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும்.



வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப் பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடைவார்கள்.



பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.



இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.


ஆரஞ்சு பழத்தின் மருத்துவ பயன்கள் :


ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சி - யும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன. 


ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமை தோற்றத்துடன் காட்சியளிக்கும். 


ஆரஞ்சு பழம் பல் சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்து ஆரஞ்சிலும் கிடைக்கும். 


நெஞ்சுவலி, இருதய நோய், எலும்பு மெலிவு போன்ற நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும். ஆரஞ்சு பழச்சாற்றை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.



நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மி.லி வரை கொடுக்கலாம். 


ஆரஞ்சு பழச்சாறு நோய் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும். 


மாதுளையின் மருத்துவப் பயன்கள்


மாதுளை பழம் சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நன்கு செயல்படும்.



மாதுளை மொட்டை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்கு கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றும்,மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒரு வருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் திப்புன்னபவியில் கூறப்படுகிறது.



இரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கரைபடித்து அடைத்துக் கொண்டால் இரத்த ஓட்டம் தடைபடும். அப்போது இதயபாதிப்பு ஏற்படும். இது அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தைத் நீங்கி விடும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் நிறைய ஊற உதவும்.



வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க மாதுளைப்பழம் சிறந்த உணவாகும்.



தாதுபுஷ்டிக்கு இது நிகரற்ற நல்ல மருந்தாகும்.



மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.



நெஞ்சு வலிக்கு இது நல்லது. மேலும் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும். மாதுளைப்பழத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள்.


அன்னாசியின் பொதுப் பயன்கள்


அதிக அளவில் அன்னாசிப்பழம் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகிறது. இதனால் வருடம் முழுவதும் கிடைக்கும். அன்னாசிப்பழம் ஜாம், ஐஸ்கிரீம், பழரசம் செய்யப் பயன்படுகிறது.


பழத்திலிருந்து சாராயம் தயாரிக்கப்படுகிறது. தவிர ஆல்கஹாலும் தயாரிக்கப்படுகிறது.


சாறு எடுத்த பின் எஞ்சிய சக்கை கால்நடை தீவனமாக பயன்படும். சக்கையிலிருந்து பசை, எரிசாராயம், வினிகர் இவை தயாரிக்கப்படும்.



இலைகளிலிருந்து நூல் எடுக்கப்பட்டு நேர்த்தியான மெல்லிய பட்டு நெய்யப்படுகிறது.


சமையலில் மணமும் சுவையும் ஏற்றும் கல்யாண சாப்பாடுகளில் பிரசித்தமானது பைன் - ஆப்பிள் ரசம். அன்னாசி அல்வா, கபாப், பல பழரசங்களுடன் சேர்த்த உற்சாக பானமாக செய்து உண்ணலாம்.


மாமிச உணவுகளை சமைக்கும் முன் அன்னாசி சாறு பிழிந்து அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் ஊறவிட்டால் மாமிசம் நன்றாக வேகும். சமைக்கும் நேரம் பாதியாக குறையும்.


மருத்துவ குணங்கள் அன்னாசியில் உள்ள புரோமலின் உணவின் செரிமானத்தை ஊக்குவிக்கும். என்ஸைசம் செரிமானம் குறைந்தவர்களுக்கு அன்னாசி மிகவும் நல்லது.


மேலை நாடுகளில் மாமிச உணவுடன் சில துண்டுகள் அன்னாசி சாப்பிடுவது வழக்கம். மாமிசம் சுலபமாக செரிக்கும். நன்கு பழுத்த அன்னாசி சாறு சிறுநீர் கழிவினை தூண்டும்.


குடலில் உள்ள புழுக்களை அழிக்கும். சிறுநீர் இயக்கத்தை மேம்படுத்தும் சீத பேதியை குணப்படுத்தும்.



சிறுநீர் கற்களை கரைக்கும். வயிற்றில் டைபாயிடு கிருமிகளை அழிக்கும்.


மலச்சிக்கல் அகலும். வயிற்று வலி குறையும்.


நல்ல குரல் வளத்திற்கும், தொண்டைப்புண் அகலவும் அன்னாசி பயன்படும் பழச்சாற்றை வாயில் வைத்து கொப்பளித்தால் தொண்டைபுண் குறையும். வாய் நாற்றத்தைப் போக்கும்.



அன்னாசி உடல் பலம் கூட உதவும். அதுவும் பழத்துண்டுகளை தேனில் தோய்த்து சாப்பிட்டால் உடல் பலம் கூடும்.



இதய சம்பந்த நோய்களுக்கு அன்னாசி நல்லது. ரத்தக்குழாய் அடைப்புகளை போக்கும்.



எலும்பு மெலிதல் நோய் உள்ளவர்களுக்கு வழக்கமான சிகிச்சையும் அன்னாசி சாறு குடித்து வந்தால் குணம் தெரியும்.


பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள் :


பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.



பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.




தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.


பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.




நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.




பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.


பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.




பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.



பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.


பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.


பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.


பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷயம் இறங்கும்.




பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் சாதத்தில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.


மாம்பழத்தின் மருத்துவ பயன்கள் :


மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். பல்வலி, றுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.




மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.




மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்தினால் சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம் மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும். 


முலாம்பழத்தின் மருத்துவ பயன்கள்


முலாம் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலை போக்குகிறது.



இதில் பொட்டாசியம் உள்ளதால் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.



வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் இதய நோய், புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது. பக்கவாதம் வராமல் பாதுகாக்கிறது.



அல்சர், சிறுநீர் சம்பந்தமான நோய், உணவு செரிப்பு தன்மை குறைதல் போன்ற பிரச்சினைகள் போக்குவதற்கு பயன்படுகிறது



கிட்னியில் உள்ள கல்லை கரைக்கக்கூடியது. இதில் அதிகமாக வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளதால் சருமம் ஆரோக்யமாகவும், தோல் மினு மினுப்பு இருக்க உதவுகிறது.



உடல் எடை குறைய உதவுகிறது


சபோட்டாவின் மருத்துவ பயன்கள் :


சப்போட்டா பழத்தை அரைத்துச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், வயிற்று வலி இவற்றைப் போக்கும்.




சப்போட்டா பழம், வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து பொடியாக நறுக்கி இவற்றை ஒன்றாக கலந்து அரைத்து பஞ்சாமிர்தம் செய்து சாப்பிட உடலுக்கு வலிமையும் உறுதியையும் தரும்.




சப்போட்டா பழம், கொய்யா, திராட்சை இவற்றை ஒன்றாகக் கலந்து அத்துடன் தேன் சேர்த்துச் சாறு எடுத்துச் சாப்பிட்டுவர உடல் வலிமை, உறுதி இவற்றைத் தரும்.




சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் இவற்றைப் போக்கும்.




சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கி அத்துடன் பால் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டுவர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.




சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது.




பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு.




சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது. கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்.




சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.









 

எலந்தைபழத்தின் மருத்துவ பயன்கள்


எலந்தை பழத்தில் புரதம், தாது உப்புகள் மற்றும் இரும்பு சத்துகள் நிறைந்துள்ளது. 



தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 எலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் சரியாகும். 



கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.



இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சரியாகும்.



எலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது.









 

கொய்யாப்பழத்தின் மருத்துவ பயன்கள் :


கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன.



இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல்முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், உறுதியாகும்.



கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டைகளில் மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிற்று பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது. கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.



கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.



கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.



கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.











தர்பூசணியின் மருத்துவ பயன்கள்


வெயிலுக்கு தர்பூசணி மிகவும் உகந்தது. இப்பழத்தில் வைட்டமின் அதிகம் நிறைந்துள்ளது.



நீரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம். இப்பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.



உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். வயிற்று வலி போக்கும். ஜீரணத்தை சீர்படுத்தும். 



இதய நோய் மற்றும் புற்று நோயில் இருந்து தர்பூசணி நம்மை காக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைப்பதில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது.



ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது. நீர் கடுப்பு மற்றும் மூளைக்கு பலத்தை தரக்கூடியது தர்பூசணி.



இப்பழத்தை சாப்பிடுவதால் சிறுநீர் பிரச்சனை நீங்கும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.



கட்டி, ஆஸ்துமா, வீக்கம், பெருங்குடல் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்தலாம்.


Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai 

7358228278