இருளின் அழகில் மெய் மறந்து
ஒளியைத் தொலைத்த நிலா
அமாவாசையானது …
ஒளியின் பிரவாகத்தில்
பொய் மறந்து
இருட்டைத் தொலைத்த நிலா
பௌர்ணமியானது
மூடியும் மூடா
இமைகளினிடுக்கில்
பொய்மெய் கலக்க
மூன்றாம் பிறையாய் தோன்றுகிறது
அதே நிலா ..
நிலா ஒன்றுதான்…
காலமிடும் கோலங்களே
வெவ்வேறு வண்ணங்களில்
வான் வாசலில்…
வரையும் விரல்களுக்கு
வைர மோதிரமணிந்து அழகுபார்க்க
வருகை புரிகின்றன .. சந்திர
சூரிய கிரகணங்கள் ?
~~~~~~~
கவிஞர் ம.திருவள்ளுவர்