மணித்துளி கணக்கின்றி
பனித்துளி மேவிய
புல்வெளியில் நடந்திருக்க வேண்டும்
?
கனித்துளி அருந்திட
மழைத்துளி நோக்கி
விண்வெளி பர்த்திருக்க வேண்டும்
?
மழைத்துளி தொடும் வேளை
வாசனை பரப்பும் மண்மொழியை
ஆழ்ந்து நுகர விரும்பும் நாசிகள்
மண்ணடி வேர்களாய் விரைகின்றன…
?
பிரிவின் முகத்துவாரத்தில்
மொழித் துளிகள் அணைகட்டி நிற்க
விழித்துளிகள் சிந்திச் சிதறுகின்றன
அன்பின் வலி உணர்த்தி !
?
நேசத்தின் அடர்த்தியில்
நெகிழ்ந்து பூக்காதோ
இந்த நிலம் முழுக்க
அன்பின் நிறம் மாறா மலர்கள் ?
~~~~~~~
கவிஞர் ம.திருவள்ளுவர்
திருச்சி