tamilnadu epaper

அம்மாவின் முந்தானை*

அம்மாவின் முந்தானை*

*அம்மாவின் முந்தானை*

 

அள்ளிச் சொருகியத

அவிழ்த்து விட்டா

என் சொத்து,

 

ஆயிரம் பணி வடைக்கு வந்திடுமே தலைப்பு எடுத்து,

 

எந்நாளும் ஈர நெஞ்சம்

என்னக் காக்கும்

தூளி மஞ்சம்,

 

நடந்துவரும் புன்ன மரம்

பறந்து வீசும் வெஞ் சாமரம்,

 

வெயிலுக்கு குடை பிடிக்கும்

வேர்வையத்தான் துடச்சிவிடும்

 

மழையிலதான் நனைஞ்சுவந்தா,

துவட்டி விட்டு நனைஞ்சிநிக்கும்

 

முகத்தை துடைச்சி விட்டு,

முத்து போல காட்ட வைக்கும்

 

கைகழுவ நான் போனா

கடமை செய்ய முன்னவரும்,

 

 வாயைத் துடச்சி விட்டு,

வாய்க் கொரு முத்தமிடும்,

 

படிக்கத்தான் போனாக்க,

கண்ணாடிய தொடச்சி நிக்கும்,

 

அடிக்கிற வெயிலுக்கு விசிறியா வீசி நிக்கும்

 

காலில் ரத்தம் பார்த்து புட்டா,

கட்டுப்போட கிழிஞ்சி நிக்கும்,

 

கண்ணீர பாத்து புட்டா

கரைஞ்சி போயி உறிஞ்சி நிக்கும்,

 

அடுப்படியில் நின்னாலும்,

அழுக்காக நின்னாலும்,,

 

அம்மாவின்முந்தான,

அப்பனுக்கே விரிஞ்சாலும்,

 

எப்போதும் என காக்கும்

என் தெய்வக் கவசமய்யா!

 

திருமதி. இரா. இராஜாமணி

ஈரோடு.