ஜாம்நகர், ஏப். 5–
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகனும், ரிலையன்ஸ் இயக்குநருமான ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தநாளையொட்டி 140 கிமீ பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். குஜராத்தில் ஜாம்நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து அதே மாநிலத்தில் உள்ள தேவபூமி துவாரகாவுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். யாருக்கும் இடையூறு ஏற்படக்கூடாது என இரவிலேயே அவர் பயணிக்கிறார். ராமநவமி தினத்தில் துவாரகாவை அடைய திட்டமிட்டுள்ளார்.அவருக்கு உடல்ரீதியாக பல பிரச்னைகள்இருக்கிற போதிலும் அதை பொருட்படுத்தாமல் இந்த ஆன்மீக பயணத்தை அவர்மேற்கொண்டுள்ளார்.
இது பற்றி ஆனந்த் அம்பானி கூறுகையில், " எனது பாதயாத்திரை கடந்த ஆறு நாட்களாக தொடர்கிறது. இன்னும் ௨௪ நாட்களில் துவாரகாவை அடைந்து விடுவேன். துவாரகாதீசர் என்னை ஆசீர்வதிப்பார். இளைஞர்களே... கடவுள் துவாரகாதீசரை நம்புங்கள். எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் துவாரகாதீசரை நினைவில் கொள்ளுங்கள். அந்த செயல் நிச்சயம் எந்த தடையுமன்றி வெற்றிகரமாக முடியும். கடவுள் இருக்கும்போது எதற்கும் கவலை வேண்டாம்" என்றார்.