இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே
--------------------
இடங்கொண்டு விம்மி =வறுத்த இடத்தை கொண்டு பெருத்த,
இணை கொண்டு = ஒன்றோடு ஒன்று ஒத்ததாக,
இறுகி = தளர்ச்சி இல்லாமல்
இளகி = மெத்தென்றிருக்கும், முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு = முத்து மாலையை தனது தனங்களின் மேல் அணிந்த,
இறைவர் வலிய நெஞ்சை= சிவபெருமானது வன்மையான உள்ளத்தை,
நடங்கொண்ட = தனது இச்சைக்கு ஏற்றவாறு ஆட்டுவிக்கும், கொள்கை நலம் = சங்கல்பத்தை கொண்ட நாயகி= உடைய நாயகி யார் எனில்,
நல் அரவின்
படம் கொண்ட = பாடம் எடுத்தாடும் நல்ல பாம்பின், அல்குல் = இடைப்பகுதியையும், பனி மொழி வேதப் பரிபுரையே = தனது இனிய வாக்கினால் வேதங்களையும் சிலம்பாக தன் காலில் அணிந்தவள்
--------------------
அகன்று கருத்து ஒன்றோடு ஒன்று தளர்வில்லாமல் கடினமானதாகவும், மென்மையானதாகவும், அதன் மேல் முத்தாரங்களை அணிந்த மலை போன்ற கொங்கைகளை கொண்டு சிவபெருமானது வன்மையான உள்ளத்தையும் தனது இச்சைக்கு ஏற்றவாறு ஆட்டி வைக்கும் தலைவி யாரெனில், சிறந்த சங்கல்பத்தையும் நல்ல பாம்பின் படத்தை போன்ற இடைப்பகுதியை கொண்டவளும் தனது இனிமையான வாக்கினால், வாக்கு சாதூரியத்தினால், வேதங்களை, காலில் சிலம்பாக அணிந்திருக்க கூடிய ஆதிபராசக்தியே ஆகும்.
(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை