தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே
--------------------
தவளே இவள் =தவம் செய்யக் கூடியவள் இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்= எங்கள் தலைவர் சிவபெருமானுடைய மனையாளும் இவளே,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் = என் பிராட்டியே எம்பெருமானுக்கு தாயும் ஆயினள், ஆகையினால்= அதனால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் = ஆகையினால் இவளே அனைத்து கடவுளுக்கும் மேலானவளாக இருக்கிறாள்,
துவளேன்= துவள மாட்டேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே = ஆகையினால் ஏனைய தெய்வங்களுக்கு மெய் தொண்டு செய்ய மாட்டேன்.
--------------------
தவம் செய்யக்கூடிய எம்பி நாட்டையே எம்பெருமானுக்கு மனைவியாகவும், அன்னையாகவும் திகழ்கிறாள். ஆகையால் அவள் ஏனைய தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமாக விளங்குகின்றாள். ஆகையினால், மற்ற தெய்வங்களை வணங்கி மனம் துவள மாட்டேன்.
மயிலாப்பூரில் மயிலாக இருந்து அம்பாள் தவம் செய்தாள். சங்கரநாராயணனாக தரிசனம் பெற வேண்டும் என்று ஆடி தபசு (தவம்) செய்த தலம் சங்கரன்கோயில்.
சாத்த வழிபாட்டு முறையிலே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு அவள் அன்னையாக இருப்பதாக ஐதீகம். மங்கலநானை கழுத்தில் தாங்கி மனைவியாக ஒருத்தி வரும் பொழுது ஒருவனது வாழ்வும், இல்லமும் வளம் பெறுகிறது. இங்கே அம்பாளை சிவனுக்கு மனைமங்கலம் என்று பட்டர் குறிப்பிடுவது ரசிக்கத்தக்கது.
(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை