tamilnadu epaper

ஆடி மாதம் அம்மன் மாதம்

ஆடி மாதம் அம்மன் மாதம்

சோட்டாணிக்கரை பகவதி*

 

ஜோதியாகநின்றகரை அம்மன் கோயில் -அதாவது பராசக்தி ஜோதி உருவில் நின்று மும்மூர்த்திகளுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காட்சி கொடுத்த இடம்

 

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் அருகில் உள்ளது. 

அன்னை ‎பகவதியை இறைவன் திருமாலுடன் சேர்த்து "அம்மே நாராயணா" என ‎பக்தர்கள் வழிபடுகின்றனர். அதாவது நாராயணியும் நானே நாராயணனும் நானே எனப்பொருள்.

 அன்னை பகவதி ஒவ்வொரு ‎நாளன்றும் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள்: ‎காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ‎ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; மாலையில் சௌபாக்கியம் ‎தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்; ‎இரவில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல ‎வண்ண உடையிலும், நண்பகல் உச்சபூஜையிலும் இரவு உச்சபூஜையிலும் மகாகாளியாக காட்சி தந்து அருள்பாலித்து வருகிறாள்.‎

 

கீதா ராஜா சென்னை