நீலாயதாக்ஷி அம்மன்*
சக்திபீடங்களில் ஒன்று -நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாக்ஷி அம்மன் கோவில்.
அம்பிகை, இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய கன்னியாக, 'யவ்வன பருவ' கோலத்தில் காட்சி தருகிறார். எனவே ஆடிப்பூர விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கிறது.
இந்த கோவில்- மதுரை மீனாக்ஷி அம்மன், காஞ்சி காமாக்ஷி அம்மன் மற்றும் காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்களை போல நீலாயதாக்ஷி அம்மன் கோவில் என்று தான் அழைக்கப்படுகிறது.
அம்பாள் எதிரிலுள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னதியை பார்த்தபடி இருக்கிறது. நந்தியின் இடது கண் சிவனையும், வலக்கண் அம்பிகையையும் பார்த்தபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. எனவே, இந்த நந்தியை "இரட்டைப் பார்வை நந்தி' என்று அழைக்கிறார்கள். கண் தொடர்பான நோய்கள் நீங்க, இந்த நந்தியிடம் வேண்டிக்கொள்ளலாம்.
அம்மனுக்கு ஆடிப்பூரம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தன்று இரவு ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்மன் வெண்மைநிற ஜரிகை புடைவையை அணிந்து, பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் ஊர்வலம் வருவார். பார்க்க பார்க்க அலுக்காத ஸ்வரூபம். அவர் அழகிய உருவை ரதத்தில் காண ஆயிரம் கண் வேண்டும்.
கீதா ராஜா சென்னை