மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி*
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள அம்மன் கோயில்.
இத்தலத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தலத்தில் எண்ணற்ற சித்தர்கள் உறைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர்.
1966 ஆம் ஆண்டு தமிழகத்தில் வீசிய புயல்காற்றால், இங்குள்ள வேப்பமரம் வீழ்ந்தது என்றும், அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது, பிறகு அவளே ஆதிபராசக்தியாக கோயில் கொண்டுள்ளாள.
சபரிமலையை போன்று இந்த கோவிலிலும் மாலை அணிந்து, இருமுடி கட்டி வந்து வழிபடுவது முக்கிய வழிபாட்டு முறையாக உள்ளது.
யார் வேண்டுமானாலும் அம்மனுக்கு பூஜை, அபிஷேகங்கள் உள்ளிட்டவைகள் செய்து வழிபடலாம்
இக்கோவிலில் உள்ள புற்று மண்டபமும் மிகவும் சிறப்புக்குரியதாகும். இங்குள்ள புற்றில் அம்மன் பாம்பு வடிவில் வசிப்பதாக நம்பிக்கை.
கீதா ராஜா சென்னை