ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் மே 3 அன்று நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பிரதமர் அல்பனீஸ் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மார்ச் 28 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசு இயங்கி வருகின்றது. அந்நாட்டில் அதி கரித்துள்ள அன்றாட வாழ்க்கைச் செலவு, வீடுகள் பற்றாக்குறை உள்ளிட்ட நெருக்கடி யான சூழலால் தற்போதைய அல்பனீஸ் அரசுக்கு எதிராக முடிவுகள் வெளிவரலாம் என சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.