tamilnadu epaper

இத்தாலி கார் பந்தயம்: 3வது இடம் பிடித்த நடிகர் அஜித் அணி

இத்தாலி கார் பந்தயம்: 3வது இடம் பிடித்த நடிகர் அஜித் அணி

ரோம், மார்ச் 24


இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் அணி 3வது இடம்பிடித்துள்ளனர்.


இத்தாலியில் நடைபெற்ற முகெல்லோ 12ஹெச் ரேஸில் மார்ச் 23 அன்று அஜித்குமார் ரேசிங் அணி கலந்துகொண்டது. தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் ஜிடி992 பிரிவில் களமிறங்கிய அஜித் அணி 3ம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.


வெற்றி பெற்ற பின்னர் அஜித் தனது அணியினருடன் இந்திய கொடியை ஏந்திவந்தார். பின்னர், தன்னைக் காண வந்த ரசிகர்களிடம் வெற்றிக் கோப்பையை காட்டிய அஜித் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.


சமீபத்தில் துபையில் நடைபெற்ற 24 ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்தியா சார்பில் ’அஜித்குமார் ரேசிங்’ என்கிற பெயரில் நடிகர் அஜித்குமார் தன் குழுவினருடன் கலந்துகொண்டார். அங்கு நடைபெற்ற கார் பந்தயப் பிரிவில் அஜித் குமார் ரேசிங் அணி 3வது இடத்தைப் பிடித்தனர். அஜித் அணிக்கு 'ஸ்பிரிட் ஆப் தி கேம்' விருது வழங்கப்பட்டது.


துபையைத் தொடர்ந்து மீண்டும் அஜித்குமார் ரேசிங் அணி இத்தாலியில் 3ம் இடம்பிடித்து அசத்தியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது.