tamilnadu epaper

இன்றைய மாற்றம்

இன்றைய மாற்றம்

எத்தனை எத்தனை
    பறவைகள் விதவிதமான
    வண்ணங்கள் 
    எண்ணங்கள் ....."

    எத்தனை தொலைவு
    கணக்கிட நேரம்
    இல்லை, இருந்தும்
    தொலை தூர
    தொடரும் பயணம் ..."

    ஒரே இடத்தில்
    ஒரே இனமாக
     இதமாக பதமாக
     எத்தனையோ
     நாள் ஓய்வு ..."

     மனித மனங்களை
     கொள்ளை கொண்டு
     போகிறது ....."

     மதத்தை இனத்தை
     சாதியை மறந்து
     மனிதத்தை காட்டி
     விட்டு செல்கிறது ..."

     மீண்டும் ஒரு
     வருடத்தில் புதுப்பிக்கும்
     இன்ப ஆனந்த
     உறவுக் கனவு ....."

     பறவைகளுக்கு
     புரியும் உறவுக்கனவு
     மனிதனுக்கு புரிவதில்லை..."

    இயற்கை
    பறவைகள்
    விலங்குகள்
    தாவரங்கள்
    மரங்கள்
    கற்றுத் தரும்
    வாழ்க்கை
    பாடத்தை ...."

   உணரத்தான்
   நேரம் இல்லை
   அவசர உலகம்
    காட்டும் அலட்சியம்
    மாலையான உறவுகள் 
    உதிரிப் பூக்களாய்
    மாறும் காலம்
     இன்றைய மாற்றம் ...."

- சீர்காழி. ஆர். சீதாராமன்