tamilnadu epaper

இயற்கையெனும் இனியக் கனி தர்பூசணி

இயற்கையெனும்  இனியக் கனி தர்பூசணி


பச்சை வண்ணத்தில்

பந்துகளைப் போல்

சாலையோர குவியல்கள் ஆங்காங்கே...


சுட்டெரிக்கும்

சூரியனின் வெப்பத்தை

தணிக்க வந்த

சிவப்பு தண்ணீர்.


இயற்கை தந்த

 இனிய கனியை

தயங்காமல்

வாங்கி விருந்தாக்கி

உண்டு மகிழ்வோமே.


நீச்சத்து

தாது சத்துக்கள் என

அனைவருக்கும் ஏற்றதாக 

கீற்று கீற்றாய்

 சுவைப்போம்

விவசாயிகளை ஊக்குவிப்போம்.



-எறும்பூர் கை. செல்வகுமார், செய்யாறு.