tamilnadu epaper

இலங்கையில் தன்முனைக் கவிதை நூல் வெளியீடு

இலங்கையில் தன்முனைக் கவிதை நூல் வெளியீடு

திருமதி ஜோதிநிர்மலா பரராசசேகரம் அவர்கள் எழுதிய “கடந்து செல்வாய் காலம் கனிந்து வரும் “ தன்முனை நூல் இலங்கை - ஈழம் லுட்சேர்ன் துர்கை அம்மன் ஆலயத்தில் அன்னைக் கலையகம் வழியாக வெளியிடப்பட்டது . நூலினை திருக்கோயில் நிர்வாகி கலையழகன் வெளியிட ஊடகவியலாளர் ஜெராட் ஜெயராசசிங்கம் , திருமதி உமா வசந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டு தன்முனைக் கவிதை வடிவத்தை அறிமுகப்படுத்திய முனைவர் கா ந கல்யாணசுந்தரம் மற்றும் அமெரிக்க பல்கலைக் கழகத்தை பாராட்டிப் பேசினர்.. முன்னதாக நூல் அறிமுக உரையை கவிஞர் ரதி கமலநாதன் நிகழ்த்தினார். விழாவில் கவிஞர்கள் சூரியா, தர்மினி ஜெராட் மற்றும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். நூலாசிரியர் நிர்மலா பரராசசேகரம் நன்றி கூறினார்.