tamilnadu epaper

உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் !!

உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் !!


 நமது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால், இரத்த ஓட்டம் தடைப்படும் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடு குறையும், செரிமான சிக்கல்கள் உண்டாகும். மேலும், உடலில் நீர்ச்சத்து அளவு குறைந்தால் இரத்தத்தின் அடர்த்தி குறையும்


 உடலில் போதியளவு நீர் இல்லை என்றாலும், சூரிய கதிர் மற்றும் வெப்பம் அதிகமாக வெளிப்படும் இடத்தில் அதிக நேரம் இருந்தாலும் வெங்குரு ஃ வேனிற்கட்டி உண்டாகும். எனவே சரியான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் இப்பிரச்சனைகளைத் தடுக்கலாம்.


 கண்களுக்கு கீழே குழி போல (நுலந டீயப) விழுந்தால், உடலில் நீர் வறட்சி ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.


 உடலில் போதியளவு நீர்ச்சத்து இல்லை எனில் மூக்கின் சருமம் வறட்சியாக மாறும் மற்றும் மூக்கில் எரிச்சல் உணர்வு இருக்கும்.


 உடலில் போதியளவு நீர்ச்சத்து இல்லை எனில் முகப்பரு அதிகரிக்க ஆரம்பிக்கும். எனவே போதுமான அளவு நீரைப் பருகுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு முகப்பரு ஏற்படுவதைக் குறைக்கலாம்.


நீங்கள் சரியான அளவு நீர் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் :


 நீங்கள் சரியான அளவு நீர் குடித்து வருகிறீர்கள் என்றால், உச்சந்தலையில் அரிப்பு, எரிச்சல், பொடுகு போன்ற பிரச்சனைகள் இல்லாமல் தலையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.


 நமது உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட் அளவில் குறைபாடு உண்டாகி கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எனவே, சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் மட்டுமே கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும்.


 மேலும் சரியான அளவு தண்ணீர் குடித்து வந்தால், உங்கள் சருமம் அழகாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்கும்.


 உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால், உங்கள் முடி மற்றும் நகங்கள் வலிமையாக இருக்கும். நீர்ச்சத்துக் குறைந்தால் முடி உதிர்தல் ஏற்படும். (முடி உதிர்வது மரபணு சார்ந்தும் இருக்க வாய்ப்புகள் உள்ளன.)


பச்சை வாழைப்பழம் பலன் தருமா ?


  பச்சை வாழைப்பழம் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது. பச்சை வாழைப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் போன்ற பாதிப்புகளிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.


இதில் வைட்டமின் டீ6 நிறைந்துள்ளது. மேலும் ஹீமோகுளோபின் உருவாவதற்கு வைட்டமின் டீ6 மிகவும் அவசியமான ஒன்றாகும்.


 வைட்டமின் டீ6 இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் சீரான பற்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.


 பச்சை வாழைப்பழத்திற்கு குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து புண்களை ஆற்றிவிடும் தன்மை உண்டு. எனவே இதை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


 நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள எளிய வழி பச்சை வாழைப்பழம் என்றே கூறலாம்.


 ஏனெனில் பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால், இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.


 சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே இதனை உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும்.


இதய நோயாளிகளுக்கும் இந்த பச்சை வாழைப்பழம் சிறந்தது. பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. ஒரு கப் பச்சை வாழைப்பழத்தில் 531 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.


எனவே இதயநோயாளிகள் இதனை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.


குறிப்பு : அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பயனளிக்காது. எனவே மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப இதனை எடுத்துக்கொள்ளலாம்.


விரல்களில் அடிக்கடி நெட்டை எடுக்காதீங்க!!


 மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமாக விளங்கும் கைவிரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களையும், தனித்தனி செயல்பாடுகளுக்கு உதவும் வகையிலும் உள்ளது.


 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விரல்களில் வீக்கம், வலி, காயம் போன்றவை ஏற்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.


மேலும் உடலின் உட்பகுதியில் நிகழும் பாதிப்புகளுக்கும், விரல்களில் ஏற்படும் பாதிப்புக்கும் அதிக தொடர்பு உள்ளது.


 விரல்களுக்கு செல்லும் நரம்புகள், இரத்தக் குழாய்கள், எலும்புகள் மற்றும் தசைகள், போன்ற உறுப்புகளின் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாக கூட விரல்களில் வலியை ஏற்படுத்தும்.


விரல்களில் நெட்டை எடுக்கலாமா ? 


முதலில் விரல்களில் ஏற்படும் வலியை தடுக்க, விரல்களில் நெட்டை எடுப்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். அடிக்கடி விரல்களில் நெட்டை எடுப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.


 மேலும் நெட்டை எடுக்கும் நேரம் சுகமாக இருந்தாலும், அதன் பின் பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு, அது பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.


 விரல்களில் வலி ஏற்படும் போது, சிவப்பு நிறமாக மாறுவது, வியர்வை ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.


 கை விரல்களை அதிகமாக பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டால், கை விரல்களுக்கான பயிற்சிகளை செய்து, விரல்களுக்கு கண்டிப்பாக ஓய்வு கொடுக்க வேண்டும்.


 இல்லையெனில், விரல்கள் முழுமையாக சோர்வடைந்து, அது நரம்பு மண்டலத்தை தாக்கி, அதிக வலியை ஏற்படுத்தும். அதனால், விரல்களுக்கான சிறு சிறு பயிற்சிகளை முன்னெச்சரிக்கையாக செய்து கொள்வது மிகவும் நல்லது.


இல்லத்தரசிகளே உங்கள் மனதில் இருக்கும் கேள்வி இதுதானா ?

காலையில் செய்கின்ற சப்பாத்தி இரவுக்குள் வறண்டு, அப்பளம் போல் மாறிவிடுகிறதா?


 சப்பாத்தி செய்யும் போது, மாவில் தண்ணீருக்குப் பதிலாக பால் ஊற்றிப் பிசைந்து செய்தால், நீண்ட நேரத்திற்கு மிருதுவாக இருக்கும்.


 மேலும் சப்பாத்தியை தோசைக்கல்லிலேயே வைத்து மூடியிருந்தாலும் சப்பாத்தி இப்படித்தான் வறண்டு போகும். எனவே இதை தவிர்க்கவும்.


பொறியல், கிரேவி போன்றவற்றின் நிறம் ஃபுட் கலர் சேர்க்காமல் சிகப்பாக வர வேண்டுமா?


 இதற்கு இரண்டு, மூன்று சிகப்பு மிளகாய்களை விதை நீக்கி, அரை கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதைக் கசக்கிப் பிழிந்தால் சிகப்பாக வரும். இதை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.


சேமியா உப்புமா செய்யும்போது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்கிறதா?


 சேமியாவை வாங்கியவுடன், அதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியவுடன், ஒரு டப்பாவில் எடுத்துவைத்து சேமியா உப்புமா செய்யும்போது பயன்படுத்தினால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்.


சமையலில் கடலைமாவுக்கு பதில் வேறு மாவுகளை உபயோகிக்கலாமா?


 கடலைமாவில் புரோட்டீன் மற்றும் மாவுச்சத்துக்கள் நிறைய உள்ளன. மேலும் பூந்தி, பஜ்ஜி, பக்கோடா, உருளைக்கிழங்கு போண்டா, ஓமப்பொடி போன்றவற்றை கடலைமாவில் செய்யும்போதுதான் அதனுடைய ஒரிசினல் ருசியும், மணமும் கிடைக்கும்.


சிலர் வாயுத்தொல்லை ஏற்படுமென்றும், ஜீரணம் பாதிக்கப்படுமென்றும் கடலைமாவைத் தவிர்ப்பார்கள். எனவே பலகாரம் செய்யும்போது கடலைமாவு பாதியும், மற்ற அரிசி மாவு பாதியும் சேர்த்து செய்யலாம்.


கேக் செய்யும் போது அதன் மேற்பகுதி வெடித்து காணப்படுகிறதா?


 நீங்கள் கேக் தயார் செய்யும் போது, பேக்கிங் பவுடரைச் சேர்க்க வேண்டிய அளவை விட அதிகமாக சேர்த்தால், கேக்கின் மேற்பகுதி வெடித்து விரிந்து விடும். எனவே கேக் தயாரிக்கும் போது கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் மட்டுமே பேக்கிங் பவுடரைச் சேர்க்க வேண்டும்.


சோடா உப்பு சேர்க்காமல் குழிப்பணியாரம், ஆப்பம் போன்றவற்றை மிருதுவாகத் தயாரிக்க முடியுமா?


 வெந்தயம், உளுந்து, அரிசி மற்றும் சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்து அரைத்து புளிக்க வைத்து, பிறகு குழிப்பணியாரம், ஆப்பம் செய்தால் சோடா உப்பு போட்டது போல் மிருதுவாக இருக்கும்.


கொள்ளுப் பருப்பின் மருத்துவக் குணங்கள் !!


  கொள்ளுப் பருப்பில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இதை ஊற வைத்து சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம். ஜலதோஷம் குணமாக கொள்ளுப் பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த வேண்டும். மேலும், இது உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். இதை அருந்துவதால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவையும் குணமாகும்.


 கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுப் பருப்பிற்கு உண்டு. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.


 அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்.


 கொள்ளுப் பருப்பு உடலில் இருக்கும் ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவையும் கொடுக்கக் கூடியது. எனவே கொள்ளுப் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


 கொள்ளு சூப் சளியைப் போக்கும் குணம் வாய்ந்தது. எனவே குழந்தைகளுக்கு சளி பிடித்தால், கொள்ளு சூப் வைத்துக் கொடுக்கலாம். இதை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.


 கொள்ளுப் பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுப் பருப்பை அரைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு, நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளுப் பொடியை போட்டால் அருமையான சுவையுடன் ரசம் இருக்கும்.


 இது பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.


 மேலும் கொள்ளும் அரிசியும், கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எனவே பெண்கள் இதை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.


குழந்தைகளை தாக்கும் மன அழுத்தம் !!

  இன்றைய சூழலில் குழந்தைகள் பலருக்கும் மன அழுத்தம் உண்டாகின்றது. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள்.


 சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். 



 பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல் காரணமாக மன அழுத்தம் உண்டாகலாம்.


 குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள் மற்றும் வாக்குவாதங்கள்.


 நட்பில் ஏற்படும் மனவருத்தம்.


 குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள்.


 மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம் மற்றும் பிடிவாதம்.


 பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தைகளையும் பாதிக்கும்.


 குழந்தைகளுக்கு, குடும்பங்கள் பிரிந்து விடுவதனால் உண்டாகும் மனவருத்தத்தினாலும் இந்நோய் உண்டாகலாம்.


 மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு.


 பெரிதாக ஏற்படும் இழப்புகள் அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்.


 பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்.


 நோயைக் குணப்படுத்த உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.


இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி மிகவும் அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரை நோயாகவும் வரலாம். இத்தகைய குழந்தைகள் மேலே குறிப்பிட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல், வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி விடுவார்கள்.


தீர்வு :


 மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருப்பினும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது மிகவும் நல்லது.


 இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிந்து அதற்கான தீர்வினைப் பெற முடியும்.


 

கொழுப்பைக் கரைக்கும் உடற்பயிற்சிகள்!!


 உடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. அது ஒரு வேலை என்பதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்ற புரிதல் அவசியம். 


 முதலில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக உடலை உடற்பயிற்சிக்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் கைகள், கால்கள், கழுத்து, எலும்பு மூட்டுகள், தோள்பட்டை என உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தயார்படுத்திய பிறகே, உடற்பயிற்சியில் இறங்க வேண்டும்.


உடற்பயிற்சி யாரெல்லாம் செய்யலாம்? யாரெல்லாம் செய்யக் கூடாது?


அதிக எடை உள்ளவர்கள், கொழுப்பைக் குறைக்க விரும்புகிறவர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெற விரும்புபவர்கள் என அனைவரும் இந்தப் உடற்பயிற்சியைச் செய்யலாம்.


 அறுவைசிகிச்சை செய்தவர்கள், காயம் அடைந்தவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்த உடற்பயிற்சிகளைப் பத்து நிமிடங்கள் என மூன்று செட்டாக தினமும் இரண்டு வேளை செய்ய வேண்டும்.


பெல்விக் லிஃப்டிங்


 முதலில் பாய் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும், பின்னர் இரண்டு கால்களையும் மடக்க வேண்டும்.


 கைகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும். இப்போது தலை மற்றும் தோள்பட்டையில் அழுத்தம் கொடுத்துக் கீழ் உடலை (பின் இடுப்பு, கால்கள், முதுகுப் பகுதி) மட்டும் உயர்த்த வேண்டும்.


 இதேநிலையில் ஒரு நிமிடம் வரை இருக்கலாம். மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல் தொடர்ந்து தினமும் மூன்று முறை செய்யலாம். இதை செய்வதால் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புக் குறைந்து தோள்பட்டை வலுவடையும். கால் தசைகள் இறுகும். முதுகுத்தண்டு நேராகும். மேலும் இது உடல் வலுப்பெற உதவுகிறது.


ஹரிஸான்ட்டல் ப்ளாங்க் 


 முதலில் பாய் விரிப்பில் முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, முட்டிப் போடும் நிலைக்கு வர வேண்டும். இடது முட்டியை மடக்கி வைத்து, உடலை நேராக வைத்துக்கொள்ள வேண்டும்.


 பின்னர், இரண்டு கால்களையும் பின்புறமாக நீட்ட வேண்டும். முழு உடலின் எடையையும் கை மற்றும் கால்கள் தாங்குவதுபோல ஊன்ற வேண்டும். இதேநிலையில் ஒரு நிமிடம் வரை இருக்கவும். இதை பத்து விநாடிகள் இடைவெளி விட்டு தினமும் மூன்று முறை செய்யலாம்.


 இந்த உடற்பயிற்சி செய்வதன் மூலமாக முதுகுத்தண்டுவடம் வலுப்பெறும். இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பைக் குறைக்கும். கைகால்கள் வலுப்பெறும். மேலும் இது உடலின் சமநிலைத் தன்மை மேம்பட உதவுகிறது.


 


செரிமானப் பிரச்சனையைப் போக்கும் எலுமிச்சை நீர்!!



 சுப காரியங்களில் முதல் இடம் வகிக்கும் பழம் எலுமிச்சையாகும். இந்த பழம் உலகெங்கும் நிறைந்து காணப்படுகிறது. விலை மலிவாகவும், எல்லா சத்துக்களும் உடையப் பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது.


 மேலும் எலுமிச்சைப் பழத்தில் மட்டுமல்லாமல், அதன் தோலிலும் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. எனவே முழு எலுமிச்சைப் பழத்தையும் நீரில் வேகவைத்து குடிப்பதால், கிடைக்கும் நன்மைகள் பற்றி 


எலுமிச்சை நீர் செய்ய தேவையானவை :


எலுமிச்சைப் பழம் - 10


தேன் - தேவையான அளவு


தண்ணீர் - தேவையான அளவு


எலுமிச்சை நீர் செய்முறை :


 முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 10 எலுமிச்சைப் பழங்களை பாதியாக வெட்டிப் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.


பின்னர் 5 நிமிடம் அந்த நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின், அந்நீரை 10 - 15 நிமிடங்கள் குளிர வைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.


 பிறகு வடிகட்டிய அந்த எலுமிச்சை நீரில், சிறிதளவு தேன் கலந்து குடிக்க வேண்டும்.


நன்மைகள் :


எலுமிச்சைப் பழத்தை வேகவைத்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.


 தினமும் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.


 அதுமட்டுமில்லாமல் தினமும் எலுமிச்சை நீர் குடிப்பதால் உடல் சோர்வு நீங்கி, சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்க உதவுகிறது.


தினமும் எலுமிச்சை நீர் குடிப்பதால் செரிமானப் பிரச்சனை மற்றும் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.


 எலுமிச்சை நீரில் உள்ள சத்துக்கள் நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதும் சுத்தமாக இருக்க உதவுகிறது.


 தினமும் எலுமிச்சை நீர் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைக்கப்பட்டு, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளலாம்.


உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டு!!


  மருத்துவக்குணம் நிறைந்த பொருட்களில் ஒன்றான பனங்கற்கண்டு, நிறைய சர்க்கரை படிகக்கற்கள் கலந்த, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை ஆகும்.


 கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பனங்கற்கண்டில் அதிகளவு வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.


பனங்கற்கண்டில் உள்ள அற்புதமான மருத்துவக் குணங்கள் :


 தினமும் பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்க வேண்டும். இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி பலன் கிடைக்கும்.


 சிறிதளவு சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.


 1 டேபிள்ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன், சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்பு அதிகரிக்கும்.


 4 பாதாம் பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டு, 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் ஆகியவற்றை பொடி செய்து, அதை பாலுடன் கலந்து குடித்து வந்தால், தீராத சளி பிரச்சனைகள் உடனே குணமாகும்.


 தொண்டை வலி இருந்தால் 1 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.


 தினமும் சிறிதளவு பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் மற்றும் கண்பார்வை அதிகரிக்கும்.


 உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 3 முறை சாப்பிட வேண்டும். இதனால் நோய்களின் தாக்கத்தையும் தடுக்கலாம்.


 சிறுநீரகக் கற்கள் பிரச்சனை விரைவில் குணமாக, 3 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட வேண்டும்.


உடல் சோர்வினை நீக்கும் சுண்டைக்காய் !!


 நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தை அளித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இப்பொழுது சுண்டைக்காயின் மருத்துவப் பயன்களைப் பற்றி


 சுண்டைக்காயில் அதிக அளவில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். மேலும் உடல் சோர்வு நீங்கும்.


 பெண்கள் பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலம்பெறும்.


 சுண்டைக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.


முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியை சரிசெய்யும்.


 சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்றுப்பொருமல் ஆகியவை நீங்கும்.


 சுண்டைக்காய் வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் மூன்று வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள் மற்றும் மூலம் குணமாகும்.


 சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி சூரணம் செய்து, நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.


 சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் 


-Thanks and regards 

 A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai 

7358228278