உணவே மருந்தென்று
வாழ்ந்திட்ட காலத்தில்
இவ்வளவு நோயுகளுமில்லை
மருத்துவமனைகளுமில்லை
இன்று திரும்பிய பக்கமெல்லாம்
மருத்துவமனைகளின் அணிவகுப்பு
எண்சான் உடம்பில்
எத்தனை எத்தனை நோய்கள்
அன்று வெள்ளையனிடம்
அடிமைப்பட்டு கிடந்த போது
சுதந்திரப் போராட்டத்திற்கு
வீரு கொண்டு எழ
உடலில் வலுவிருந்தது
அதனால் தானோ என்னவோ
ஆரோக்கியமற்ற அயலக உணவுகளுக்கு
எப்படியோ நம்மை அடிமைப்படுத்தி
ஆரோக்கியமறச் செய்துள்ளனர்
சிறுவர் முதல் பெரியவர் வரை
அனைவரும் நஞ்சென அறிந்தாலும்
நாவின் அடிமைத்தனத்தால்
நலிந்து போகும் அவல நிலை இன்று!
நெஞ்சு பொறுக்குதில்லையே!
உடம்பை வளர்த்து உயிர் வளர்க்கச் சொல்லிய
தீர்க்க தரிசகளின்
கரிசனங்களை மறந்து
எதை நோக்கி பயணிக்கிறோம் நாம்
இனியேனும் நாம்
விழிப்படைவோம்!
உணவே மருந்தாய்
உண்பதன் மூலம்
உடலும் மனமும்
ஆரோக்கியம் பெறுவோம்!
பு. பாரதி கண்ணம்மாள்
தஞ்சாவூர்